வைஃபை ஆன் செய்ததும், “தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன்; தெருவிலே அங்கே அங்கே அங்கே…”ன்னு பழைய பாடலை பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. பாரதியார் பாட்டில் இருந்து கச்சேரியை ஆரம்பிக்கிறீங்க ப்ரோ?
நம்ம கச்சேரி இருக்கட்டும் ப்ரோ.. இன்னைக்கு சிஎம் விஜய் கூட்டுன கேபினட் மீட்டிங்கை பத்தி கோட்டையில ஒரே பேச்சுங்க ப்ரோ..
சிஎம் விஜய் இன்னைக்கு 2-வது அமைச்சரவை கூட்டத்தை கூட்டி இருந்தார். அதுல, “நிதி நிலை அறிக்கையை பற்றி மட்டும்தான் விவாதிக்கப்பட்டது”ன்னு அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி கொடுத்திருந்தார்.
ஆனால் 40 நிமிடம் நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு வெளியே வந்த பெரும்பாலான அமைச்சர்கள் ரொம்பவே இறுக்கமாகத்தான் இருந்தாங்க..

சரின்னு கேபினட் மீட்டிங்கை பத்தி கோட்டையில விசாரிச்சப்ப, “சிஎம் விஜய் இன்னைக்கு அவசரமாக 2-வது கேபினட் மீட்டிங்கை கூட்டுனதுக்கு காரணமே உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க் கொடுத்த அந்த ஒரு ரிப்போர்ட்தான்.. அதுல, ”அமைச்சர்கள் சிலர் இரவு நேரங்களில் சில நட்சத்திர விடுதிகளுக்கு ரெகுலராக போவதை வழக்கமா வெச்சிருக்காங்க.. அதே மாதிரி சிலரோட வீடுகளுக்கும் போய்கிட்டு இருக்காங்க..
இன்னொரு பக்கம் அமைச்சர்களோட எல்லா மூவ்ஸையும் திமுக கவனிச்சுகிட்டு இருக்கு.. 10 அமைச்சர்களை பிக்ஸ் பண்ணி அவங்களுக்கு பணம் கொடுக்கிற மாதிரி வீடியோ எடுக்கவும் திமுக சைடுல பெரிய ஆபரேஷன் ப்ளான் செஞ்சுகிட்டிருக்காங்க..”ன்னு சொல்லப்பட்டிருந்தது..
இதை பார்த்துட்டுதான் சிஎம் விஜய் உடனடியாக இன்னைக்கு கேபினட் மீட்டிங்கை கூட்டினாரு”ன்னு சொல்றாங்க

அடுத்ததா, கேபினட் மீட்டிங்குல என்ன நடந்ததுன்னு அமைச்சர்கள் தரப்புல விசாரிச்சப்ப, “இன்னைக்கு மீட்டிங்கில சிஎம் விஜய் ரொம்பவே சீரியசாகவே சில விஷயங்களை வெளிப்படையாக சொல்லிட்டார்.. எல்லா அமைச்சர்களோட செயல்பாடுகளை 2 மாசமா நானும் தொடர்ந்து கவனிச்சுகிட்டுதான் வர்றேன்.. அமைச்சர்கள் சிலர் நட்சத்திர ஹோட்டல்களுக்கு போவது, சிலரோட வீடுகளுக்கு ரெகுலரா விசிட் அடிக்கிறதுன்னு உளவுத்துறை ரிப்போர்ட்டும் டீட்டெய்லா வந்திருக்கு..

உங்களை திமுக டார்கெட் செஞ்சிருக்கு… உங்ககிட்ட சிலர் மூலமா பணம் கொடுக்கிற மாதிரி ஏற்பாடு செஞ்சு அதை வீடியோவா ரெக்கார்டு பண்ணி வெளியிடவும் திமுக ப்ளான் போட்டிருக்குது.. அதனால எல்லாரும் ரொம்பவே கவனமா இருங்க.. நீங்க பேசுறதுல, செயல்பாட்டுல எல்லாமே கவனமா இருக்கனும்..

ஊழல், முறைகேடு, லஞ்சம்னு ஏதாவது புகார் வந்தா தெரிஞ்சவங்க.. தெரியாதவங்கன்னு எல்லாம் நான் பார்க்க மாட்டேன்.. அமைச்சர் பதவியிலிருந்து உடனே தூக்கிடுவேன்.. அதனால எல்லாருமே ரொம்ப கவனமா இருங்க”ன்னு சிஎம் விஜய் சொல்ல சொல்ல சில அமைச்சர்கள் முகம் இறுகிப் போச்சு.. பலரும் ஒருத்தரை ஒருத்தர், ‘அவரா இருக்குமோ? இவரா இருக்குமோ?’ன்னு பார்த்துகிட்டாங்க..
இந்த கேபினட் மீட்டிங்கை கூட்டுனதே இந்த வார்னிங்குக்குதான்னும் சிஎம் விஜய் சொல்லிட்டு போனார்”ன்னு சொல்றாங்க ப்ரோ..
சிஎம் விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “சார்.. ஏற்கனவே இங்கே அமைச்சர்கள் பத்தி வேரு ஒரு விவகாரம் ஓடிகிட்டு இருக்கு.. அதாவது மினிஸ்டர் புஸ்ஸி ஆனந்த், சமீபமா ரசிகர் மன்றத்துல இருந்து அமைச்சரானவங்களை அழைச்சு பேசுனாரு.. அப்ப, “எனக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி எல்லாம் ஒன்னு சேர்ந்து என்னை ஓரம் கட்டுற முயற்சியில இருக்காங்க.. இவ்வளவு கஷ்டப்பட்ட நமக்கே நெருக்கடி வருது.. அதனால ரசிகர் மன்றத்துல இருந்து வந்த நீங்க எல்லாரும் ரொம்பவே கவனமா இருங்கன்னு சொல்லி இருந்தாரு.. புஸ்ஸி ஆனந்த் இப்படி எச்சரிக்கை கொடுத்த சில நாட்களிலேயே சிஎம் விஜய்யும் இன்னைக்கு கேபினட்டை கூட்டி வார்ன் பண்ணி இருக்கார்.. அதிகாரத்தோட அனல் என்னான்னு இப்பதான் எங்களுக்கே புரிய வருது சார்”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
