முதலில் சொன்னது மின்னம்பலம்.. மு.க. ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

Published On:

| By Mathi

Chidambaram Stalin DMK Cong

நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் சொன்னது போலவே, தமிழக முதல்வர் ஸ்டாலினை மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தற்போது சந்தித்து பேசி வருகிறார்

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் 41 தொகுதிகளில் பேச்சுவார்த்தையை தொடங்கியது. திமுக 25-ல் தொகுதிகளில் தொடங்கியது.

ADVERTISEMENT

இதனால் இரு கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தையில் தேக்க நிலை ஏற்பட்டது. இதனிடையே விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கை கோர்க்க கூடுமோ? என்ற கேள்விகளும் எழுந்தன.

இந்நிலையில்,ப.சிதம்பரத்தை தொடர்பு கொண்டு பேசிய ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவர கூறியிருந்தார். இதனை நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் முதன் முதலாக இன்று காலை 10.03 மணிக்கு பதிவு செய்திருந்தோம்.

ADVERTISEMENT

இதனையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். இருவரும் ஆலோசனை நடத்திவிட்டு ஒன்றாக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க புறப்பட்டனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன்சாலை முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் செல்வப்பெருந்தகையும் உடன் இருந்தார்.

ADVERTISEMENT

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share