தனுஷ் பட இயக்குனருடன் இணையும் லெஜண்ட் சரவணன்

Published On:

| By Minnambalam

தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் அருள் “தி லெஜண்ட்” என்ற  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கே சவால் விடும் வகையில் தனது முதல் படத்தை பிரம்மாண்டமாக வெளியிட்டு அசத்தினார் லெஜண்ட் சரவணன்.

தி லெஜண்ட் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான கதைகளை கேட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார். இந்நிலையில் லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

ADVERTISEMENT

எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் லெஜண்ட் சரவணனின் இரண்டாவது படத்தை இயக்க போகிறார் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தனது அடுத்த படத்திற்கு ஒரு சிறந்த இயக்குனரை லெஜண்ட் சரவணன் தேர்வு செய்துள்ளார் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

– கார்த்திக் ராஜா

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பண்ருட்டி சக்திவேல் கொலை வழக்கு: கடலூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு!

ADVERTISEMENT

நீக்கப்பட்ட பெயர் பலகை: ஸ்டாலினை சந்தித்த பொன்முடி

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share