டிஜிட்டல் திண்ணை: திருமாவளவன் அமைச்சராகிறாரா? விஜய் முடிவால் எஸ்பி வேலுமணி கோஷ்டி ‘ஷாக்’!

Published On:

| By Mathi

CM Vijay Thirumavalavan

வைஃபை ஆன் செய்ததும், “நாங்க நாலு பேரு.. எங்களுக்கு பயம் கிடையாது”ன்னு கருப்பு பட பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்ன ப்ரோ.. செம்ம சாங்கோட என்ட்ரியா?

நாம என்ட்ரியாகுறது இருக்கட்டும் ப்ரோ.. விஜய் அமைச்சரவையில யாரு என்ட்ரியாகப் போறாங்கன்னுதான் இப்ப செம்ம ஹீட் டிபேட் ப்ரோ..

ADVERTISEMENT

சிஎம் விஜய் கூட 9 அமைச்சர்கள் மே 10-ந் தேதி பதவி ஏத்துகிட்டாங்க.. அவங்களுக்கு இலாகாவும் ஒதுக்கிட்டாங்க..

அதுக்கு அப்புறமா அமைச்சரவை விரிவாக்கம் அப்படிங்கிறது ரொம்பவே லேட்டாகிட்டே இருக்குது.. இதை பத்திதான் விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “சிஎம் விஜய்க்கு சிபிஐ, சிபிஎம் வெளியில இருந்து ஆதரவு தர்றோம்னு முதல்ல அறிவிச்சாங்க.. அதுக்கு பிறகு விசிகவும் முஸ்லிம் லீக்கும் வெளியில இருந்து ஆதரவுன்னு சொன்னாங்க..

ADVERTISEMENT

அப்புறமா சட்டசபையிலஅதிமுகவோட எஸ்பி வேலுமணி அணியில இருந்த 25 எம்.எல்.ஏக்களும் சிஎம் விஜய்க்கு சப்போர்ட்டா ஓட்டுப் போட்டாங்க..

இதுல சிபிஐ, சிபிஎம்மை பொறுத்தவரைக்கும் அமைச்சரவையில இடம் பெறுவது இல்லைன்னு தொடக்கம் முதலே உறுதியா இருக்காங்க…

ADVERTISEMENT

விசிகவைப் பொறுத்தவரையில வெளியில இருந்துதான் ஆதரவுன்னு சென்னையில பேட்டி கொடுத்தாரு திருமா.. ஆனா மே 10-ந் தேதி அன்னைக்கு டெல்லியில போய், “விஜய் என்கிட்ட பேசுனாரு.. அமைச்சரவையில சேர சொன்னாரு.. நம்பிக்கை வாக்கெடுப்பு முடிஞ்ச பிறகு பேச்சுவார்த்தை நடத்துவோம்” பேட்டி கொடுத்துட்டாரு..

அதாவது விசிகவைப் பொறுத்தவரைக்கும் அமைச்சரவையில சேர்றதுன்னுதான் முடிவு.. சிஎம் விஜய்யைப் பொறுத்தவரைக்கும் திருமாவளவனை கேபினட்டில் சேர சொல்லி வலியுறுத்திகிட்டு இருக்கிறாரு.. திருச்சி கிழக்கு தொகுதியில கூட போட்டியிட்டு ஜெயிக்கலாம்.. நீங்க இடைத்தேர்தலில் நில்லுங்கன்னும் சொல்றாரு..

இருந்தாலும் திருமாவளவன் ஊசலாட்டாமா இருக்கிறார்.. தான் அமைச்சரவையில சேர்றதா? இல்லை.. விசிக 2 எம்.எல்.ஏக்களில் ஒருத்தருக்கு அமைச்சர் பதவி வாங்கி கொடுத்துட்டு எம்.பி.யாகவே இருந்துடலாம்னு முடிவு எடுக்கிறதா?ன்னுதான் திருமா யோசிச்சுகிட்டு இருக்கிறார்”ன்னு சொல்றாங்க ப்ரோ..

சரிங்க ப்ரோ.. விசிகவுல என்ன சொல்றாங்க?

விசிகவுல திருமாவளவனுடன் இருப்பவர்களிடம் நாம் பேசுனப்ப, “தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே திருமா கணிச்சுட்டாரு.. இந்த எலக்‌ஷன்ல நிச்சயம் திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது.. தொங்கு சட்டசபைதான் வரும்னு யூகிச்சாரு.. கூட்டணி அமைச்சரவைக்கு சான்ஸ் இருக்கும் போது நாம அமைச்சராகலாம்னுதான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில போட்டியிடலாம்னு முடிவெடுத்தாரு.. அங்க விசிகவுல யாரு நின்னாலும் ஜெயிக்க முடியும்.. அது விசிகவோட கோட்டை.. அதனால காட்டுமன்னார்கோவில் தொகுதியை செலக்ட் செஞ்சாரு..

ஆனா அப்ப திமுகவும் மத்த கூட்டணி கட்சிகளும், ‘ஏன் இப்படி முடிவு எடுக்கிறீங்க.. சிதம்பரம் எம்பி தொகுதியை ராஜினாமா செஞ்சா அதுக்கு இடைத்தேர்தல் வருமே என்றெல்லாம் சொன்னாங்க.. அதனாலதான் காட்டுமன்னார் கோவில் தொகுதியில போட்டியிடலைன்னும் திருமா அறிவிச்சார்.. இப்ப விஜய்யே திருமாகிட்ட பேசியிருக்காரு.. நீங்களும் அமைச்சரவைக்கு வந்துடுங்கன்னு அழுத்தமா வலியுறுத்திகிட்டு இருக்கிறார். அதனாலதான் சீரியசா டிஸ்கஷன் நடத்திகிட்டு இருக்கிறார்”ன்னு சொல்றாங்க ப்ரோ..

ஆமாம் ப்ரோ.. 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்க்கா சிஎம் விஜய்க்கு ஓட்டு போட்டாங்களே.. அவங்க எத்தனை பேருக்கு அமைச்சர் பதவியாம்?

அதிமுகவோட எஸ்பி வேலுமணி கோஷ்டியை பத்திதான் நாம நிறைய சொல்லிட்டோமே ப்ரோ.. தொடக்கத்தில் இருந்தே எஸ்பி வேலுமணி அணியோட ஆதரவை ஏத்துக்கவே வேணாம்னு உறுதியா சொல்றவர் சிஎம் விஜய்யோட அட்வைசர் ஜான் ஆரோக்கியசாமி.. அப்படி ஏத்துகிட்டாலும் அமைச்சர் பதவி கொடுக்கவே வேண்டாம்.. அவங்க மேல இருக்கிற பழைய கேஸை எல்லாம் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை இப்ப கையிலெடுக்கும்.. நமக்குதான் குடைச்சல்னும் ஜான் எச்சரிச்சாருன்னு நாம சொல்லி இருந்தோம்..

அதே நேரத்துல சிஎம் விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி, புஸ்ஸி ஆனந்த் தரப்புதான் ஆதவ் அர்ஜூனா சொல்லி எஸ்பி வேலுமணி டீம் கூட பேச்சுவார்த்தை நடத்தினாங்க.. 10 பேருக்கு அமைச்சர் பதவியை கேட்டு பேச்சுவார்த்தையை தொடங்குச்சு எஸ்பி வேலுமணி டீம்.. ஆனால் விஷ்ணு ரெட்டி, புஸ்ஸி ஆனந்த் 4 அமைச்சர் பதவிதான்னு உறுதியா இருந்தாங்க..

இப்ப நிலைமையே வேறாகிடுச்சு ப்ரோ.. இதை பத்தி விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுறப்ப, “அதிமுகவோட எஸ்பி வேலுமணி டீம்-க்கு 4 அமைச்சர் பதவி தரலாம் அப்படிங்கிற மாதிரிதான் பேச்சு இருந்துச்சு.. ஆனா அதிமுகவை கேபினட்டில சேர்த்துகிட்டா எங்க ஆதரவை வாபஸ் வாங்குறதை பத்தி யோசிப்போம்னு சிபிஐ, சிபிஎம், விசிக எல்லாம் பகிரங்கமாக சொல்லிட்டாங்க.. இதனாலஅரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிடக் கூடாதுன்னுதான் இப்போதைக்கு சிஎம், அதிமுக விஷயத்துல தெளிவா ஒரு முடிவு எடுத்திருக்கிறாரு..

அதாவது அதிமுகவோட எஸ்பி வேலுமணி டீம்-க்கு அமைச்சரவையில இடம் இல்லை.. அப்படிங்கிறதுதான் அந்த முடிவு.. அதை அவங்களுக்கும் முந்தாநாளே பாஸ் பண்ணியாச்சு”ன்னு சொல்றாங்க ப்ரோ..

ஓ.. எஸ்பி வேலுமணி டீம் ரியாக்‌ஷன் என்னவாம்?

எஸ்பி வேலுமணி டீமில் இருக்கும் சீனியர்ஸ்கிட்ட விசாரிச்சப்ப, “இப்படி ஒரு முடிவை விஜய் சொல்வாருன்னு எதிர்பார்க்கலை.. அமைச்சர் பதவி கிடைக்கும்; ஆளும் கட்சி அனுசரணை கிடைக்கும்னுதான் எடப்பாடியை பகைச்சுகிட்டு ஓட்டு போட்டோம்.. இப்ப நட்டாத்துல விட்ட கதையா நம்பிக்கை ஓட்டுல ஜெயிச்சுட்டு அமைச்சரவையில இடம் இல்லைன்னு சொல்றதை ஜீரணிக்க முடியாம இருக்காங்க.. இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில இருக்கிறோம்”னு சொல்றாங்க ப்ரோ..

கேரளாவில இருந்து ஆளுநர் சென்னைக்கு ரிட்டர்ன் ஆகிட்டார்.. அமைச்சரவை விரிவாக்க அறிவிப்பும் வரப் போகுது.. காங்கிரஸ் கட்சியில 2 பேருக்கு அமைச்சர் பதவி கன்பார்ம் ஆகியிருக்கு… இப்ப திருமாவளவன் அமைச்சராகிறாரா? இல்லையா? தவெகவில யார் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போகுது? அமைச்சரவையில சேர்க்காததால அதிமுக எஸ்பி வேலுமணி கோஷ்டி என்ன செய்யப் போகுது?ன்னு எலக்‌ஷனுக்கு பிறகும் டென்ஷன்தான் ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share