ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் போட்ட ‘ஆல் இந்தியா’ ஸ்கெட்ச்.. அதிர்ந்த மோடி- அமித்ஷா!

Published On:

| By Mathi

Digital Thinnai Stalin

வைஃபை ஆன் செய்ததும், “ஆடாதடா ஆடாதடா மனிதா.. ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. இந்த ஹம்மிங் எதுக்காம்?

ADVERTISEMENT

இதுக்கெல்லாம் பொழிப்புரையா எழுதுவாங்க? தேர்தல் களத்துல என்ன நடக்குதுன்னு சொல்றேன்யா..

நாம சொல்லிகிட்டே இருந்த மாதிரி ராகுல் காந்தி இன்னைக்கு தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்துக்கு வந்துட்டாரு.. ஆனா ராகுல் பிரச்சாரத்தை தொடங்குனப்பவே திமுகவோட பிரஷரை ஏத்திவிட்டுட்டாரு..

ADVERTISEMENT

ராகுல் பிரச்சாரத்துல என்ன நடந்துச்சாம்?

இதை பத்தி திமுக சீனியர்கள்கிட்ட பேசுனப்ப, “ஸ்டாலினும் ராகுல் காந்தியும் ஒன்னா பிரச்சாரம் செய்ய எத்தனையோ டைம் முயற்சி செஞ்சோம்.. ராகுல் ஆபீசில் இருந்து ஓகேன்னு பதிலே வரலை.. அதனால இனி ராகுலும் ஸ்டாலினும் சேர்ந்து பிரச்சாரம் செய்ய வாய்ப்பில்லைன்னு ஆர்எஸ் பாரதி பிரஸ் மீட்ல சொல்லிட்டாரு..

ADVERTISEMENT

இன்னைக்கு பொன்னேரியில ராகுல் காந்தி பிரச்சாரத்தை ஆரம்பிச்சாரு.. 27 நிமிஷம் பேசுன ராகுல் காந்தி ஒரு இடத்துல கூட ஸ்டாலின் பேரை சொல்லலைன்னா எப்படி? போகிற போக்கில் திமுக-ன்னு உச்சரிச்சுட்டு போயிட்டாரு.. இதுல எங்களுக்கு செம்ம கடுப்புதான்..

இருந்தாலும் சோளிங்கர் பிரச்சாரத்துல பேலன்ஸ் செய்யுற மாதிரி ஸ்டாலினை மோடியால கட்டுப்படுத்த முடியாது.. ஸ்டாலின் சுதந்திரமா ஆட்சி செய்கிறவர்னு பாராட்டுனாரு..

அதே சோளிங்கர் கூட்டத்துல, திமுக-காங்கிரஸ் கூட்டணியில குழப்பம் ஏற்படுத்திகிட்டே இருக்கிற பிரவீன் சக்கரவரத்தியும் மேடையில இருந்தாரு.. ராகுல் காந்தியும் அவரோட பேரை மறக்காம சொன்னாரு.. அதோட பேசி முடிச்சதும் பிரவீன் சக்கரவர்த்திகிட்ட கேசுவலா பேசிகிட்டும் இருந்தாரு.. ராகுலோட இந்த டபுள் கேம் எங்களுக்கு சுத்தமா பிடிக்கலைங்க”ன்னு சொல்றாங்க..

ஸ்டாலின் நேத்து பட்டாசு வெடிச்சு இனிப்பு எல்லாம் கொடுத்திருக்காரே..

ஆமாய்யா.. திண்டுக்கல் பிரச்சாரத்துக்கு போன ஸ்டாலின், ஐபி, அவரது மகன் ஐபி செந்தில்குமார் எல்லோரையும் வெச்சுகிட்டு பட்டாசு வெடிச்சு கொண்டாடினாரு.. அப்புறமா கூட்டத்துல கலந்துகிட்டவங்களுக்கு இனிப்பும் கொடுத்தாரு.. பிரச்சாரத்தை தொடங்கும் போதே ‘வெடிய போட்டுட்டுதான் வந்திருக்கிறேன்’ன்னு பெருமிதமா சொன்னாரு..

இதுக்கு காரணமே தொகுதி மறுவரையறை மசோதா, லோக்சபாவில் தோத்து போனதுதான்னு ஒரு வரியில சொல்லிடவும் முடியாதாம்.. ஏன்னா ஸ்டாலின் போட்ட ‘ஸ்கெட்ச்’ அந்த மாதிரியாம்..

இதை பத்தி பார்லிமெண்ட் கூட்டத்துல கலந்துகிட்ட திமுக எம்பிக்கள்கிட்ட விசாரிச்சப்ப, “இந்த மசோதா அரசியல் சாசன திருத்த மசோதா.. அதனால மக்களவையில் 3-ல் 2 பங்கு எம்பிக்கள் ஆதரவு தேவை.. அதாவது சபையில கலந்துக்கிட்ட எம்.பி.க்களில் 3-ல் 2 பங்கு எம்.பிக்கள் ஆதரவு தேவை..

லோக்சபாவில் பொதுவா பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லைதான்.. ஆனா வழக்கம் போல சில சித்து விளையாட்டு விளையாடினா மசோதாவை நிறைவேத்தலாம்னு பாஜக கணக்குப் போட்டுச்சு..

அதாவது வட இந்திய கட்சிகளான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு மொத்தமா 66 எம்.பிக்கள் இருக்காங்க.. இவங்க வாக்கெடுப்பில கலந்துக்காம ஆப்சென்ட் ஆகிட்டால் இருக்கிற எம்.பிக்களில் பெரும்பான்மை கணக்கு வெச்சு ஜெயிச்சுடலாம் அப்படிங்கிறதுதான் பாஜகவோ ப்ளான்..

இங்கிட்டு, பாஜக கவர்மெண்ட் இப்படி ஒரு மசோதா கொண்டு வருதுன்னு தெரிஞ்ச உடனே அலாரத்தை அடிச்சுட்டார் ஸ்டாலின்.. ‘பழைய திமுக’வை பார்க்க போறீங்கன்னு எச்சரிச்சாரு.. கறுப்பு கொடி ஏத்திட்டு மசோதா நகலை எரிச்சாரு..

அதோட பாஜகவின் ப்ளானை காலி செய்யுற மாதிரி அகிலேஷ் யாதவ், மமதா பானர்ஜிகிட்டேயும் ஸ்டாலின் பேசினாரு.. இந்த மசோதாவை ஜெயிக்க விட்டுடக் கூடாதுன்னு ரொம்பவே வலியுறுத்தி பேசி வெச்சிருந்தாரு ஸ்டாலின்.. அவங்களும் நிச்சயமாக தோற்கடிப்போம்னு உறுதி கொடுத்திருந்தாங்க..

இதை தெரிஞ்சுகிட்ட பாஜக, வாக்கெடுப்பு முதல் நாள் இரவில் இருந்து எந்த எந்த எம்பிக்கள் கிட்ட எல்லாம் பேரம் பேச முடியுமோ எல்லார்கிட்டேயும் பேரம் பேசுனது.. சமாஜ்வாதி, மமதாவின் திரிணாமுல் எம்.பிக்களை எப்படியாவது வளைச்சுடலாம்னு ரொம்பவே பாஜக மெனக்கெட்டு இறங்கி வேலை செஞ்சது..

ஆனா ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்தான் ஒர்க் அவுட் ஆச்சு.. வாக்கெடுப்பில மசோதா தோத்து போயிடுச்சு.. அதனாலதான் ஸ்டாலின் ரொம்பவே சந்தோசமாகிட்டாரு.. திண்டுக்கல்லில் அவரே பட்டாசு கொளுத்தி வெடி வெடிச்சதுக்கும் இதுதான் காரணம்” என்றனர்.

செம்ம ஸ்கெட்ச் போல.. எடப்பாடி பிரசாரத்துல ரொம்பவே கோபமா இருக்கிறாரே?

ஆமாய்யா.. போன எலக்‌ஷன்ல உதயநிதி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிரச்சனைக்காக செங்கல்லை தூக்கி காண்பிச்சு களேபரம் பண்ணிட்டாரு.. இந்த டைம் சசிகலா காலில் எடப்பாடி விழுகிற போட்டோவை வெச்சு பிரச்சாரம் செய்யுறாரு.. இது எடப்பாடியை ரொம்பவே கடுப்பாக்கிடுச்சாம்..

அதே மாதிரி தவெகவுக்கு போன செங்கோட்டையன், எடப்பாடியை பெர்சனலா அட்டாக் பண்ணிட்டாரு.. இதுக்கு பதிலடியா கோபிச்செட்டி பாளையத்துல இன்னைக்கு மைக் பிடிச்ச எடப்பாடி, “நீ என்ன என்ன ஆட்டம் போட்டன்னு எல்லாத்தையும் சிஎம் ஆ இருக்கும் போதே எடுத்து வெச்சுட்டேன்.. வெளியே விட்டேன் கோபி தெருவுல நடக்க முடியாது”ன்னு ஒருமையில ஏகமா பேசிட்டாரு..

எடப்பாடிக்கும் ஒரு ஆறுதல் செய்தி இருக்குதுய்யா. அண்ணாமலையின் பிரச்சாரம்தான்.. எடப்பாடிக்கு பரம எதிரியா இருக்கிற அண்ணாமலை இப்ப அதிமுக வேட்பாளர்களுக்காக தீவிரமா பிரச்சாரம் செய்யுறாரு.. ”எடப்பாடிதான் சிஎம்.. எடப்பாடி தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி”ன்னு கூலா பேட்டியும் கொடுத்துகிட்டு இருக்காரு.. இருந்தாலும் அண்ணாமலை என்னைக்கு எப்படி கேமை மாத்துவாருன்னு சந்தோஷப்பட முடியாம தவிக்குதய்யா அதிமுக என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share