டிஜிட்டல் திண்ணை: விஜய்யின் “Operation D-29”.. பரபரக்கும் கோட்டை.. மாஜி திமுக அமைச்சர்களை நெருங்கும் ஆபத்து!

Published On:

| By Mathi

Operation D-29 Vijay DMK

வைஃபை ஆன் செய்ததும், “எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு… ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு”ன்னு விஜய்யின் (Vijay) கில்லி பாட்டை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்ன ப்ரோ.. சிஎம் விஜய் பாட்டு செம்ம மாஸ் இல்லையா?

ஆமாம் ப்ரோ.. பாட்டுல இருக்கிற மாதிரிதான் இப்ப ரியல் ஆக்‌ஷனும் இருக்குதே..

ADVERTISEMENT

சிஎம் பதவியில உட்கார்ந்துட்டாலும் நேரத்துக்கு செக்கரேட்டரியேட் வரமாட்டாரு.. அவரை கான்டாக்ட் பண்ண முடியாதுன்னு விமர்சனங்கள் வெச்சாங்க..

ஆனா சிஎம் விஜய், ரெகுலரா தலைமை செயலகம் வந்து ரொம்பவே ஆக்டிவ்வா அரசு பணிகளை வேகமாகவே முடுக்கிவிட்டுகிட்டு இருக்காரு.. செக்கரெட்டேரியட்டுல நடக்குற நிகழ்ச்சிகளையும் விடாமல் அட்டெண்ட் பண்ணிடுறாரு..

ADVERTISEMENT

அதேநேரத்துல சிஎம் ஆன பிறகும் பொலிட்டிக்கலாக ஜரூரா ’ஆபரேஷன்’ லாஞ்ச் பண்ணி ஒவ்வொரு ஸ்டேஸ் பை ஸ்டேஜா சக்ஸஸ் பண்ணிக்கிட்டே இருக்காருன்னும் சொல்றாங்க ப்ரோ..

இதை பத்தி சிஎம் விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, ”சிஎம்மா பதவியேத்தப்ப ஒவ்வொரு கட்சியோட ஆதரவை பத்தியும் குழப்பமும் தயக்கமும் விஜய்க்கு இருந்துச்சு..

ADVERTISEMENT

அதனால அதிமுகவோட எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் கிட்ட போன்ல விஜய் பேசிகிட்டு இருந்தாரு.. அவங்கதான், “எங்ககிட்ட மட்டும் பேசுனா, எங்க கூட இருக்கிற எம்.எல்.ஏ.க்கள் நம்ப மாட்டாங்க.. நீங்க ஆபீசுக்கு நேரில வாங்க”ன்னு கூப்பிட்டாங்க.. அதனால சிஎம், சிவி சண்முகம் ஆபீஸ்ல போய் பார்த்தாரு..

ஆனா, அதிமுகவோட எம்.எல்.ஏக்களை அமைச்சரவையில சேர்க்குறதுல ஏகப்பட்ட வில்லங்கம் ஒன்னு கூடி வருதுன்னு புரிஞ்சுகிட்டாரு… அதனால அவங்க வேண்டாம்னும் உறுதியா முடிவெடுத்துட்டாரு..

சரி.. அதிமுக வேண்டாம்னு முடிவெடுத்தா மட்டும் போதுமா? சப்போர்ட் பண்ற கட்சிகளை கச்சிதமாக கைக்குள்ள வெச்சிக்கனும் இல்லையா? அதுக்குதான் ஸ்கெட்ச் போட்டு ஆபரேஷன் நடத்தி கிட்டு இருக்கிறாரு சிஎம் விஜய்.

எலக்‌ஷன் நேரத்துல திமுக (DMK) VS டிவிகே(TVK)-ன்னுதான் பிரசாரம் செஞ்சாரு.. அதுல ஜெயிச்சுட்டாரு.. இப்போதைக்கு சிஎம் விஜய்யோட முழு கவனமும் 2029 எம்பி எலக்‌ஷனை நோக்கிதான்..

சிஎம் பதவியேற்ற அடுத்த சில நாட்களிலேயே தன்னோட டீம்கிட்ட ஆலோசனை செய்யறப்ப, “அதிமுகவைப் பொறுத்தவரைக்கும் அது உடைஞ்சு கலகலகத்து போயிருக்கு.. அதிமுகவை நாம டார்கெட் செய்யறதால நமக்கு எந்த பலனும் இல்லை..

ஆனா திமுகவை 2029 எலக்‌ஷனுக்கு முன்னாடி எவ்வளவு பலவீனப்படுத்தனுமோ அவ்வளவு பலவீனமாக்கிவிட்டுடனும்.. அதுக்கான வேலைகளையும் முழுவீச்சுல செய்யுங்க.. இனி நம்ம டார்கெட் திமுகதான்”ன்னு சொல்லி இருந்தாரு சிஎம் விஜய்..

இதனோட முதல் ஸ்டேஜ்தான் ஆதவ் அர்ஜூனா மூலமா திமுகவோட நம்பகமான கூட்டணி கட்சிகளான முஸ்லிம் லீக், விசிகவை அமைச்சரவைக்குள்ள கொண்டு வந்து சக்சஸ் பண்ணினது..

இதுல ரெண்டு விஷயங்களை சாதிக்கனும்னு சிஎம் நினைச்சாரு..

முதல்ல, சிபிஐ, சிபிஎம் மாதிரி விசிக, முஸ்லிம் லீக் வெளியில இருந்து ஆதரவு தர்றது அப்படிங்கிறது என்னைக்கு இருந்தாலும் ஆட்சிக்கு ஆபத்துதான்னு புரிஞ்சு வெச்சிருந்தாரு.. அதனால எப்படியாவது இந்த ரெண்டு பார்ட்டியையும் அமைச்சரவையில கொண்டு வந்து சேர்த்துட்டா ஆட்சிக்கு ஆபத்து வராதுன்னு கால்குலேஷன் போட்டாரு.. அதே மாதிரியே நடந்துருச்சு..

ரெண்டாவது, திமுக கூட்டணியில இருந்து காங்கிரஸ் ஏற்கனவே விலகிடுச்சு.. என்னதான் நமக்கு ஆதரவு கொடுத்தாலும் இன்னமும் திமுக கூட்டணியிலதான் இருக்கிறோம்னு சிபிஐ, சிபிஎம், விசிக, முஸ்லிம் லீக் சொல்றாங்க.. திமுகவை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்தியாகனும்னா திமுக கிட்ட இருந்து அத்தனை கூட்டணி கட்சிகளையும் பிரிச்சாகனும்.. இப்போதைக்கு விசிகவும் முஸ்லிம் லீக்கும் அமைச்சரவையில வந்துட்டதால 2029 லோக்சபா எலக்‌ஷன்ல தவெக கூட்டணியிலதான் இருக்க போறாங்க.. கம்யூனிஸ்ட் கட்சிகளும் நம்ம கூட வந்துருவாங்க.. திமுக கூட்டணியில இருக்கிற மதிமுகவும் சிஎம் விஜய்க்கு சப்போர்ட்டா இருக்கு.. ஆக சிஎம் விஜய் நினைச்சமாதிரியே திமுகவையும் கூட்டணி கட்சிகளையும் பிரிச்சு தனிமரமாக்கிவிட்டுட்டாரு..

இப்படியே போனா எலக்‌ஷன் நேரத்துல திமுக, பாஜகவோடதான் கூட்டணி அமைக்கிற சூழ்நிலை வரும்.. அதுதான் 2029 லோக்சபா எலக்‌ஷன்ல நமக்கு சாதகமா இருக்கும்னு சிஎம் விஜய் நினைக்கிறாரு” ன்னு சொல்றாங்க ப்ரோ.

ஓஹோ.. இதுதான் சிஎம் விஜய்யோட ஆபரேஷனா… சினிமாவுல மாதிரி பார்ட் 2 எதுவும் இங்கேயும் இருக்கா ப்ரோ?

அடடே! ரொம்ப கிளவரா பேசுறீங்க ப்ரோ.. ”திமுகவை தொடர்ந்து பலவீனமாக்கிட்டே இருக்கனும்.. திமுகவை நிலைகுலைய வெச்சுகிட்டே இருக்கனும்”னு சொல்லி அதிகாரிகளுக்கும் ஆர்டர் போட்டிருக்கிறாராம் சிஎம் விஜய்..

இதை பத்தியும் சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் தரப்புல விசாரிச்சப்ப, “ஆமாம் சார்.. சிஎம் சைடுல இருந்து சில ஆர்டர்ஸ் வந்துருக்கு.. போன திமுக கவர்மெண்ட்டுல சிஎம்மா இருந்த ஸ்டாலின் டிபார்ட்மெண்ட் தொடங்கி எல்லா அமைச்சர்கள் துறையிலும் என்ன என்ன தவறுகள், முறைகேடுகள் நடந்திருக்குன்னு டீட்டெய்ல் ரிப்போர்ட் கொடுக்கனும்னு ஆர்டர் போட்டிருக்கார்..”னு சொல்றாங்க ப்ரோ

முதல் கட்டமாக மாஜி அமைச்சர் மூர்த்தியோட பத்திரப் பதிவு துறையிலதான் அதிகாரிகள் டீம் களமிறங்கி இருக்காங்களாம்..

தேர்தலுக்கு முன்னாடியே பத்திரப் பதிவு துறை முறைகேடுகளை பத்தி விஜய்க்கு ஏகப்பட்ட புகார்கள் போனதாம்.. பதவிக்கு வந்த பின்னரும் இப்ப வரைக்கும் பத்திரப் பதிவு ஊழல்களைப் பத்திதான் கம்ப்ளெயிண்ட் அதிகமாக சிஎம் விஜய்க்கு வந்துகிட்டு இருக்காம்..

இந்த டிபார்ண்ட்மெண்ட்ல, குறிப்பா கவர்மெண்ட்டோட கைடு லைன் வேல்யூ பிக்ஸ் பண்றதுக்கு 1 ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாய் ரேஞ்சுக்கு லஞ்சம் வாங்கினதா புகார் போயிருக்கிறதாம்.. இதை எல்லாத்தையும் எவிடென்ஸோட எடுக்க சொல்லி இருக்கிறாராம் சிஎம் விஜய்.

இந்த மூவ்ஸ் பத்தி சிஎம் விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்டேயும் பேசுனப்ப, “சிஎம்மா கலைஞர், ஜெயலலிதா இருந்தப்ப ஆட்சிக்கு வர்றப்ப எல்லாம் மாறி மாறி கேஸ் போட்டுகிட்டு இருந்தாங்க.. ஆனா போன டைம் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தப்ப எடப்பாடி, அவரோட மினிஸ்டர்ஸ் மேல வழக்கு போட்டு எந்த நடவடிக்கையுமே எடுக்கலை… ஆனால் இப்ப சிஎம் விஜய், ”அந்த மாதிரி எல்லாம் திமுகவை விட்டுட முடியாது.. திமுகவை ஆட்டம் காண வைக்கனும்னா ஆக்‌ஷன்ஸ் ரொம்ப முக்கியம்”னு கறாரா சொல்லி ஆர்டர் போட்டிருக்கிறார்”ன்னு கன்பார்ம் பண்றாங்க ப்ரோ..

சரிங்க ப்ரோ.. ஸ்டாலின் என்ன நினைக்கிறாராம்?

திமுகவைப் பொறுத்தவரைக்கும் ”என்னதான் விஜய் கவர்மெண்ட்டை ஆதரிச்சாலும் நம்ம கூட்டணியில எல்லா கட்சிகளும் இருப்பாங்க”ன்னு திமுக நம்பிக்கையோடு இருந்துச்சு.. ஆனா காங்கிரஸ் பாதையில விசிகவும் முஸ்லிம் லீக்கும் விஜய் கேபினட்டுல இணைஞ்சது ஸ்டாலினுக்கு ரொம்பவே அதிர்ச்சிதானாம்..

ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்க நம்மகிட்ட பேசுனப்ப, “சிபிஐ, சிபிஎம் மாதிரிதான் திருமாவும் விஜய் கேபினட்டுக்குள் போகாம வெளியே இருந்து ஆதரிப்பாருன்னு ஸ்டாலின் நினைச்சாரு.. ஆனா இப்ப எல்லாமே தலைகீழாகிடுச்சு.. திருமாவும் காதர்மொகிதீனும் விஜய் கேபினட்டுல இணைய முடிவு எடுத்துட்டோம்னு ஸ்டாலின் கிட்ட சொல்லிட்டுதான் போனாங்க..

ஆனாலும் ”விஜய் ஆட்சியை ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைன்னு கடைசி நிமிஷம் வரைக்கும் விமர்சிச்சுகிட்டுதான் இருந்தாரு திருமா.. அதனால விஜய் கேபினட்டுல விசிக இணையாதுன்னு நினைச்சோம்.. ஆனா நாம நினைச்சதுதான் தப்புன்னு திருமா இப்படி செஞ்சுட்டாரே”ன்னு ரொம்பவே வருத்தப்படுறார் ஸ்டாலின்.

அதே மாதிரிதான், ”இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காலங்காலமாக நம்ம கூடத்தான் இருக்கு.. ஒவ்வொரு டைமும் காதர் மொகிதீன் என்னை சந்திக்கும் போதும் கன்னத்தை வாஞ்சையுடன் தடவி அன்பாதான் பேசுவாரு.. ஆனா அவரும் இப்படி விஜய் கேபினட்டுல சேர்ந்துட்டாரே”ன்னு ரொம்பவே பீல் பண்ணினாரு ஸ்டாலின்”ன்னு சொல்றாங்க ப்ரோ..

இப்ப இருக்கிற நிலவரத்தை பார்த்தா அமைச்சரவை மேட்டர் எல்லாம் முடிஞ்சுருச்சு.. இனிமேல் விஜய் அரசின் தடாலடியான நடவடிக்கைகள் எந்த நேரத்துலயும் யார் மேலேயும் பாயலாம்னுதான் சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share