டிஜிட்டல் திண்ணை: திமுகவில் அடுத்த ’டார்கெட்’ மாஜி மூர்த்தி?

Published On:

| By Minnambalam Desk

Digital Thinnai: DMK's Ex Minister Moorthy the Next 'Target'?

வைஃபை ஆன் செய்ததும், “வாழ்த்தவோ வீழ்த்தவோ வா.. நேரில் வா.. மோதுதல் யாவர்க்குமாம்” என படித்தபடி டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. யாரை பத்தி சொல்லப் போறீங்க?

ADVERTISEMENT

திமுகவோட மாஜி அமைச்சர் எ.வ.வேலுவை மினிஸ்டர் ஆதவ் அர்ஜூனா ஏன் குறிவெச்சாரு? என்ன நடந்துச்சுன்னு விரிவாக சொல்லி இருந்தோம் இல்லையா?

இப்ப அதே மாதிரி இன்னொரு சம்பவம் நடந்துகிட்டு இருக்கு.. இந்த டைம் திமுகவோட மாஜி மந்திரி மூர்த்திதான் டார்கெட் போல.. களமிறங்கியிருப்பது அதே மதுரை மினிஸ்டர் நிர்மல்குமார்.

ADVERTISEMENT

பழனியில ரூ100 கோடி கோவில் நில மோசடி பத்தி பிரஸ் மீட்டுல பேசுன மினிஸ்டர் நிர்மல்குமார், “திமுகவில் அமைச்சராக இருந்த மூர்த்தி, “மினிஸ்டர் கட்டிங்”னு வசூல் செஞ்சாரு.. இதை வசூலிக்க ஒவ்வொரு பத்திர ஆபீசிலும் 2 பேர் இருந்தாங்க.. ராத்திரி 9 மணி வரைக்கு எல்லாம் பத்திர பதிவு செஞ்சாங்க..”ன்னு அடுக்கடுக்கான அதிர்ச்சியான குற்றச்சாட்டுகளை சொன்னாரு..

இதுல கொந்தளிச்ச மாஜி மினிஸ்டர் மூர்த்தி, ” 589 பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் ஏஜென்ட்டை நியநித்து 20 சதவீதம் கமிஷன் பெற்றதாக பொய்யான குற்றாட்டுகளை முன்வைக்கிறார் மினிஸ்டர் நிர்மல்குமார். என் பதவிக்காலத்தில் ரூ.94 ஆயிரம் கோடியாக இருந்த அரசின் வருவாயை ரூ.1.68 லட்சம் கோடியாக உயர்த்தி காட்டினேன்.. எந்தவொரு பத்திரப்பதிவு அலுவலரிடம் போனில் கூட நான் பேசுனது இல்லை. அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக ஒரு பத்திரமாவது பதிவு செஞ்சேன்னு ஆதாரம் தர முடியுமா?”ன்னு சவால் விட்டிருக்கிறார்..

ADVERTISEMENT

இதை பத்தி நாம விசாரிச்சப்ப, “மாஜி மூர்த்திக்கு எதிராக மதுரை மீட்டிங்குல ரொம்பவே ஓபனா அட்டாக் செஞ்சுதான் நிர்மல்குமார் பேசிகிட்டு இருக்கிறாரு.. இனி மூர்த்தியும் இல்லை.. பிடிஆரும் இல்லை.. நாமதான்னு ஓபனாகவே மதுரையில டிக்ளேர் செய்யுறாரு நிர்மல்குமார்..

இப்ப மூர்த்தியும் சவால்விட்டு காத்திருக்கிறார்.. இன்னொரு பக்கம், விஜிலென்ஸ் அதிகாரிகள் ஏற்கனவே மூர்த்திக்கு நெருக்கமானவங்க, மூர்த்தி கூட இருந்தவங்கன்னு பலருக்கும் ‘ஸ்கெட்ச்’ போட்டு காத்திருக்கு.. அதே மாதிரி, அதிகாரிகங்ககிட்டேயும் விஷயங்களை கறந்துஇருக்கு.. மூர்த்தி பீரியட்ல பத்திரப் பதிவு டிபார்ட்மெண்ட்ல எப்படி எல்லாம் எங்க எல்லாம் பெரிய விவகாரங்கள் நடந்துச்சுன்னும் ‘டேட்டா’ கலெக்ட் பண்ணிட்டாங்களாம்.. அதனால அடுத்த ஆட்டம் மதுரையிலதான்”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share