தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று (நவம்பர் 27) விவாகரத்து வழங்கியது.
கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று நடிகர் தனுஷுக்கும், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
சுமார் 20 ஆண்டுகள் திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2022 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தனர்.
இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும் முயன்ற நிலையில் தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதில் உறுதியாக இருந்தனர்.
இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் முதல் மூன்று முறை இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் மீண்டும் இருவரும் சேரப்போகிறார்களா என்ற கேள்வி எழுந்தது.
இந்தநிலையில், கடந்த நவம்பர் 21ஆம் தேதி இருவரும் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நீதிமன்றத்தில் ஆஜரான தனுஷிடமும், ஐஸ்வரியாவிடமும் மூடப்பட்ட அறையில் நீதிபதி சுபா பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது திருமண உறவில் இருந்து பிரிவதில் உறுதியாக இருப்பதாக இருவரும் கூறியதை தொடர்ந்து நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி கூறினார்.
இந்தநிலையில், இன்று (நவம்பர் 27) நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு விவகாரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு செயல்படுத்தாது : முதல்வர் ஸ்டாலின்
உதயநிதி பிறந்தநாளுக்கு பள்ளி மாணவர்கள் வாழ்த்து : கலெக்டரிடம் பாஜக புகார்!