டாப் 10 மூவ்ஸ்.. ட்விஸ்ட்க்கு மேல் ட்ஸ்விட்.. திருமாவுக்கு துணை முதல்வர் பதவி, கம்யூனிஸ்ட்கள் என்ன செய்ய போகிறார்கள்? காத்திருக்கும் விஜய்

Published On:

| By Mathi

தமிழக அரசியல் களத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு

118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லை என்பதால் விஜய்யை ஆட்சி அமைக்க முடியாது என அறிவித்துவிட்டார் ஆளுநர் அர்லேகர்.

ADVERTISEMENT

112 (தவெக 107+காங்கிரஸ் 5) எம்.எல்.ஏக்களைக் கொண்ட விஜய், பெரும்பான்மையை நிரூபிக்க 6 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற நிலையில் இருக்கிறார்.

  • திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ, சிபிஎம், விசிகவிடம் மொத்தம் 6 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் இந்த கட்சிகளிடம் விஜய் ஆதரவை கோரினார்.
  • விஜய் கட்சியின் ஆதவ் அர்ஜூனா ஏற்கனவே விசிகவில் இருந்ததால், அக்கட்சியின் ஒரு தரப்பினர் மூலமாக விஜய்யை திருமாவளவன் ஆதரித்தாக வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிடவும் வீடியோக்கள் வெளியிட்டும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.
  • திருமாவளவனை நேரடியாக தொடர்பு கொண்டு பேசிய ஆதவ் அர்ஜூனா, “உங்களுக்கு துணை முதல்வர் பதவி .. தருகிறோம்; கேட்கிற துறைகளையும் தருகிறோம்; அதனால் விஜய்யை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். விஜய்யும் திருமாவளவனை தொடர்பு கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார்.
  • சிபிஐ, சிபிஎம் தலைவர்களை தவெகவின் நிர்மல்குமார் சந்தித்து பேசினார். இதில் விஜய் மீது சிபிஐ,சிபிஎம் தலைவர்களுக்கு மிகவும் அதிருப்தி. ஏனெனில் சிபிஐ ஆதரவை கேட்டு சிபிஐ-ன் பாலன் இல்லத்துக்கு நேரில் வந்தவர் ஜெயலலிதா; ஆனால் தமது ஆட்சிக்கு இக்கட்டான நேரத்தில் விஜய், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நிர்மல்குமாரை அனுப்புவதா? என்கிற கோபத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன.
  • கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பொறுத்தவரையில் விஜய்க்கு ஆதரவு தருவது இல்லை என்கிற முடிவில் உள்ளனர்.
  • கம்யூனிஸ்ட்களின் இன்றைய செயற்குழு, மாநில குழுக்களின் கூட்டத்தில், அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு தரும்போது தாங்கள் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறோம் என்பது குறித்துதான் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
  • -சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு விசிகவின் உயர்நிலைக் கூட்டம், ஆன்லைனில் ZOOM மீட்டிங்காக நடத்தப்படும். கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவுகளின் அடிப்படையில் திருமாவளவன் முடிவை அறிவிப்பார்.
  • திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் அதிமுக, பெரும்பான்மைக்கான 117 எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை பெறுவதில் முனைப்பாக உள்ளது.
  • திருமாவளவனை தொடர்பு கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சிக்கு விசிக ஆதரவு கொடுத்தால் துணை முதல்வர் பதவி தரப்படும்” என கூறியுள்ளார்.
  • திமுக ஆதரவுடன் அதிமுக அமைக்கும் ஆட்சியை இடதுசாரிகள் ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அக்கட்சிகளின் தேசிய தலைவர்கள் எம்.ஏ. பேபி, டி. ராஜா ஆகியோரிடம் திமுகவின் கனிமொழி எம்.பி. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில், “விஜய் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி பாஜக ஆட்சி செய்யவே முயற்சிக்கும். இதனைத் தடுத்தாக வேண்டும் எனில் ஒரே வழி அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தருவதுதான். அதனால்தான் அதிமுக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து திமுக ஆதரவு தருகிறது; கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share