வைஃபை ஆன் செய்ததும், “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” பாட்டை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. நடக்குது? எல்லாமே ட்விஸ்ட்டாகவே இருக்குதே?
அப்படிதான்யா நிலவரம் இருக்கு.. இன்னைக்கும் பரபரப்பான சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துகிட்டே இருக்கே..
இன்னைக்கு மாலையில திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்துச்சு.. இதுல பேசுன ஸ்டாலின், “ எந்த முடிவு எடுத்தாலும் நீங்க எல்லாம் கட்டுபட்டு நடக்கனும்.. வர்ற 10-ந் தேதி வரைக்கும் சென்னையில்தான் இருக்கனும்”னு அதிரடியாக உத்தரவு போட்டாரு..
அதோட, “நிலையா ஆட்சி அமைய அவசரமான் எந்த முடிவையும் எடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கியும்” தீர்மானம் நிறைவேத்தி இருக்காங்க..
இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு முன்னாடி கம்யூனிஸ்ட் லீடர்ஸ், விசிக திருமாவளவனுடன் ஸ்டாலின் ரொம்ப தீவிரமாக டிஸ்கஷன் செஞ்சாரு.. அதை பத்தி பிறகு சொல்றேன்…
இன்னொரு பக்கம், ”தனிப்பெரும் கட்சியின் தலைவரான விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கலை.. இது பாஜக சதி”ன்னு காங்கிரஸ் மட்டுமில்ல திமுக கூட்டணியில இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, கமல்ஹாசன்னு எல்லாருமே கண்டிக்கிறாங்க.. காங்கிரஸ் நாளைக்கு ஆர்ப்பாட்டத்தையும் அறிவிச்சிருக்கு..
இதுக்கு இடையில ஆளுநர் அர்லேகரை விஜய் இன்னைக்கும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புல, “பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏ.க்கள் லிஸ்ட்டை உங்ககிட்ட கேட்குறதே உங்க பாதுகாப்புக்குதான்”ன்னு அழுத்தமாகவே சொன்னார் ஆளுநர்..
விஜய்யோ, “நாங்க சட்டசபையில பெரும்பான்மையை நிரூபிச்சுக்கிறோம்”னு பதில் சொன்னாலும் ஆளுநர் அதை ஏத்துக்கலை..
இதுக்கு அப்புறமா ஆளுநர் மாளிகை ஒரு அறிக்கையும் வெளியிட்டுச்சு.. அதுல” விஜய்கிட்ட மெஜாரிட்டி இல்லை”ன்னு அப்பீசியலாகவே சொல்லியிருக்காங்க..
இதை பத்தி நாம விசாரிச்சப்ப, “ஆளுநர் அர்லேகர் கோவா சபாநாயகராகவும் இருந்தவர்.. அவருக்கு இந்த மாதிரி மெஜாரிட்டி விஷயங்கள் நல்லாவே தெரியும்.. நாளைக்கு கோர்ட்டுக்கே போனாலும் எப்படி ஃபேஸ் பண்ணனும்னு தெரியும்.. அதுக்குதான் இப்படி அப்பீசியலாகவும் லீகலாகவுமே சில விஷயங்களை ஆளுநர் செய்கிறார்”ன்னு சொல்றாங்க..
இந்த பரபரப்புக்கு நடுவில ஸ்டாலினை இன்னைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சண்முகம், வீரபாண்டியன், விசிக திருமாவளவன் எல்லாரும் சந்திச்சு நீண்டநேரம் ஆலோசனை நடத்தினாங்க..
இதை பத்தி ஸ்டாலினுடனான டிஸ்கஷன்ல கலந்துகிட்ட கம்யூனிஸ்ட் நிர்வாகிகள்கிட்ட பேசுனப்ப, “இன்னைக்கு பல விஷயங்களை எந்தவித பிரஷ்ஷரும் இல்லாம ஸ்டாலின்கிட்ட பேசுனோம்.. குறிப்பா அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு தரும்னு சொல்றதை பத்தியும் பேசுனோம்.. அப்ப நாங்க, ”அதிமுக ஆட்சிக்கு திமுக ஆதரவு தந்தா எதிர்காலத்துல உங்களோட அரசியலுக்கு அது பாதிப்பை ஏற்படுத்திடாதா?”ன்னு ஓபனாகவே கேட்டோம்.. அதுக்கு கூலாகவே பதில் சொன்ன ஸ்டாலின், “ “நாம பெரிய தீமை எதுன்னு பார்க்கனும்.. இப்ப விஜய் ஆட்சி அமைக்க முடியாம போகும் நிலையில ஜனாதிபதி ஆட்சியைத்தான் கொண்டு வருவாங்க.. ஜனாதிபதி ஆட்சின்னாவே பாஜகவோட ரூல்தான்.. பாஜகவை ஆட்சி செய்ய நாம எப்படி விட்டுட்டு இருக்க முடியும்?அதனால பாஜக கூட்டணியில இருந்து வெளியே வந்து அதிமுக ஆட்சி அமைக்கிறாங்கன்னா வெளியில இருந்து ஆதரவு தந்துடலாம்”னு விளக்கம் தந்ததாக சொன்னாங்க.. இந்த மீட்டிங்கில, “திமுகவின் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, எ.வ.வேலு, ஆ.ராசா எல்லாரும் கூட இருந்தாங்க”ன்னும் சொல்றாங்க
அதே மாதிரி விசிக தரப்புல விசாரிச்சப்ப, “பாமக இருக்கிற கூட்டணியில நாங்க இருக்கமாட்டோம்னு அப்படிங்கிறதுதான் நிலைப்பாடு.. ஆனா இப்ப மறுபடியும் ஒரு தேர்தலை சந்திக்கிற மாதிரி சூழ்நிலை இருக்கும் போது உயர்நிலைக் கூட்டத்தை கூட்டி நாங்க பேசுறோம்”னு ஸ்டாலின்கிட்ட திருமாவளவன்” சொல்லி இருக்கிறார்” என்றனர்.
ஸ்டாலினை சந்திச்ச கம்யூனிஸ்ட் தலைவர்களும் திருமாவளவனும், அதிமுக ஆட்சிக்கு திமுக ஆதரவு தரும் அப்படிங்கிற விவகாரத்துல “நாளைக்கு எங்க கமிட்டி கூடுது.. அதுல டிஸ்கஷன் செஞ்சிட்டு சொல்றோம்”னு மட்டும் சொல்லிட்டு வந்திருக்காங்களாம்..
சிபிஐ, சிபிஎம் ரெண்டு கட்சிகளிலும் கூட பல்வேறு டிஸ்கஷன்கள் நடக்குது.. அதாவது , “திமுக ஆதரவோட அதிமுக ஆட்சி அமைச்சா அந்த கவர்மெண்ட் நிலையானதா இருக்குமா”ன்னு சந்தேகம் எழுப்புறாங்க.. இன்னொரு தரப்பு, “நாம திமுக கூட்டணியிலதான் நின்னு ஜெயிச்சிருக்கோம்.. அதனால கூட்டணிக்கு தலைமை தாங்குற திமுக என்ன முடிவு எடுக்குதோ அதையே நாமும் ஏத்துக்குவோம்.. அதைவிட்டுட்டு விஜய்க்கு ஆதரவு தர்றது எல்லாம் ரொம்ப துரோகம்”னும் சொல்றாங்க
சரி.. இப்ப விஜய் என்னதான் செய்ய போறாராம்?
ஆளுநரை சந்திச்சுட்டு வந்த விஜய்கிட்ட, “நம்மகிட்ட பெரும்பான்மை இல்லை”ன்னு ஆளுநர் மாளிகை அறிக்கையே வெளியிட்டிருக்குன்னு சொல்லப்பட்டது.. இதை கேட்ட விஜய் ரொம்பவே அப்செட் ஆனார்.
அப்புறமா செங்கோட்டையன், ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் எல்லோர்கிட்டேயும் ரொமப் நேரமா விஜய் ஆலோசனை நடத்துனார்..
இந்த ஆலோசனையில என்ன பேசுனாங்கன்னு விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “பாஜக நம்மளை ஆட்சி அமைக்கவிடமட்டாங்கன்னு தெளிவா தெரிஞ்சு போச்சு.. அதனால இனி ஆட்சி அமைக்கிற முயற்சிகளையே எடுக்காம இருக்கலாம்”னு விஜய் சொன்னார்.. ஆனா நேத்து போலவே இன்னைக்கும் ஆதவ் அர்ஜூனா, “இல்லை.. இல்லை.. நான் கம்யூனிஸ்ட் லீடர்ஸ்கிட்ட பேசிகிட்டே இருக்கேன்.. திருமாகிட்டேயும் பேசுறேன்.. நாளைக்கு நல்ல முடிவா சொல்வாங்க”ன்னு நம்பிக்கை கொடுத்தாருன்னு” சொல்றாங்க
ஆளுநர் மாளிகையில இன்னைக்கு இன்னொரு சம்பவமும் நடந்திருக்கு.. ஆளுநர் மாளிகைக்கு தலைமைச் செயலளர், பொதுத்துறை செயலாளர், டிஜிபியை ஆளுநர் அர்லேகர் அழைச்சு பேசுனார்.. இந்த மீட்டிங்குல, “விஜய் சிஎம்மா பதவியே ஏற்கலை.. அவருக்கு யாரை கேட்டு சிஎம்-க்கான கான்வாய் எல்லாம் அனுப்புனீங்க.. சிஎம்-க்கான செக்யூரிட்டி பத்தின ப்ளூ புக் ரூல்ஸ் பத்தி எல்லாம் நீங்க தெரியாமலா இருக்கீங்க? விஜய்க்கு செக்யூரிட்டி கொடுக்க சொல்லி இங்க ஆளுநர் மாளிகையில இருந்து இன்ஸ்ட்ரக்ஷன் எதுவும் வந்துச்சா? யாரை கேட்டுங்க இப்படி எல்லாம் முடிவு செஞ்சீங்க?”ன்னு லெப்ட்- ரைட்டுன்னு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை விளாசிட்டாராம் ஆளுநர்.. அதோட, டிஜிபிகிட்ட, “நீங்க உங்க இஷ்டத்துக்கு 2 எஸ்பிக்களை டிரான்ஸ்பர் செஞ்சிருக்கீங்க.. அது எப்படி நீங்களா டிரான்ஸ்பர் செய்யலாம்”னும் டோஸ் விட்டாராம் ஆளுநர் என்றபடியே டைப் செய்து லசென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
