Delimitation: ஆதிக்க வாதிகளையும், அடிமைகளையும் எதிர்த்து தமிழ்நாடு வெல்லும் – மு.க.ஸ்டாலின் சூளுரை

Published On:

| By Pandeeswari Gurusamy

Stalin

ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து தமிழ்நாடு போராடி வெல்லும் என முதல்வர் மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்கள் மீது இன்று ஏப்ரல் 17-ந் தேதி மாலை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்!

அன்று, நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் சூழ்ச்சியால்தான் சின்னமலையை வீழ்த்த முனைந்தார்கள்!

ADVERTISEMENT

இன்றோ, தமிழ்நாட்டுக்குள் நேரடியாக நுழைய முடியாத டெல்லி ஆதிக்கவாதிகள் ‘தொகுதி மறுவரையறை’ எனும் சதித் திட்டத்தால் நம்மை அரசியல் வலிமையற்றவர்களாக்க முனைகிறார்கள்.

அன்று, சின்னமலையைக் காட்டிக் கொடுத்தான் ஒரு துரோகி. இன்றும் சில அடிமைகள் தங்கள் சுயநலத்துக்காகத் தாய்த்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே RSS எஜமானர்களின் காலடியில் அடகு வைக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்த ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து TN Will Fight TN Will Win எனத் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் சூளுரைக்கிறேன்! வெல்வோம் ஒன்றாக!” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share