தொகுதி மறுவரையறை மசோதாவை திடீரென மக்களவையில் தாக்கல் செய்ததற்கு பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டசபை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் என். பாண்டியை ஆதரித்து நேற்று ஏப்ரல் 16-ந் தேதி நடிகர் பிரகாஷ்ராஜ் பிரசாரம் செய்த போது பேசியதாவது: இன்னைக்கு நான் இங்க நடிகனா வரல. நான் ஒரு நடிகன் அப்படிங்கிறதுக்காகவும், அதுக்காக நீங்க காட்டுற அன்புக்காகவும் அதைத் தப்பா பயன்படுத்த நான் விரும்பல. ஏன்னா, நடிகன் தொழில் வேற.
3 மாடல்கள்
இந்தத் தேர்தலை நாம மூணு மாடலுக்கான ஒரு தேர்தலா தான் பாக்கணும்:
- முதல்ல, திராவிட மாடல்.
- ரெண்டாவது, அடிமை மாடல்.
- மூணாவது, சினிமா மாடல்.
நான் ஒன்னும் அரசியல்வாதி கிடையாது, எந்தக் கட்சிக்காரனும் கிடையாது. உங்கள மாதிரி நானும் ஒரு ஓட்டர்தான். நாம ரெண்டு பேரும் இந்தத் தேர்தலை பத்திப் பேசுவோம். இங்க பாருங்க…
அடிமை மாடல்
இந்த அடிமை மாடலுக்கு வெட்கம், சூடு, சொரணை இதெல்லாம் கொஞ்சம் கம்மிதான்.
மகளிர்களோட உரிமைக்காக ஒரு சட்டம் கொண்டு வரணும்னு நேத்து நம்ம ரெண்டு எம்பி-கிட்ட கேட்டேன். மதுரைக்கு வரணும்னு இருந்தேன், ஆனா திடீர்னு அங்க ‘மன்னர்’ கூப்பிட்டு இருக்காருன்னு போறாங்க. அங்க போனா, அதுக்குள்ள டி-லிமிடேஷன் (Delimitation) பாஸ் பண்றான். நான் ஏன் சூடு, சொரணை இல்லாம பேசுறாங்கன்னு சொல்றேன்னா… இந்த எடப்பாடியோ இல்ல மத்த கட்சிகளோ… இந்த அடிமை மாடல் தமிழ்நாட்டுக்கு துரோகம் பண்ணிக்கிட்டு இருக்கு.
எவ்வளவு தைரியம் இருக்கனும்
தேர்தல் நேரத்துல எவ்வளவு தைரியம் இருந்தா அவன் இதைப் பண்ணுவான்? ஆனா இவங்க வாயை மூடிக்கிட்டு நிக்கிறாங்க பாருங்க… இந்த மாடல் நமக்குத் தேவையா? மதுரையை இன்னொரு மணிப்பூர் ஆக்கப் பாக்குறானுங்க. அங்க இருந்து நேரா பழனிக்கு வருவானுங்க. இதுதான் இவங்களோட வழி.
சாமியையே திருடும் கும்பல்
மக்களே, நான் ரொம்பப் பேசல. ஒரு ரெண்டு மூணு விஷயம் மட்டும் சொல்றேன். முதல்ல பழனியைப் பத்திப் பேசுவோம். சாமி சிலையைத் திருடுற கும்பலை பத்தி கேள்விப்பட்டிருப்போம். ஆனா இங்க முருகனையே, சாமியையே திருடுற கும்பல் வந்திருக்கு. பழனி அவனுக்கு முப்பாட்டனாம்… இப்படி கதை அளக்குறானுங்க. அறிவு இருக்கா? பழனிங்கிறது தமிழ் கடவுள். அதுக்கு வரலாறு தெரியணும், ஆர்க்கியாலஜி தெரியணும். அவங்களுக்குத் தெரியலன்னா விட்டுருங்க, ஆனா நாம கவனமா இருக்கணும்.
திராவிட மாடல்
திராவிட மாடல் நமக்கு என்ன கொடுத்துச்சு? கல்வி கொடுத்துச்சு. இந்தியாவுக்கே ஒரு மாநிலம் இப்படித்தான் இருக்கணும்னு பெருமை தேடித்தந்துச்சு. நம்ம மொழி மானத்தைக் காப்பாத்துச்சு. இப்போ நம்ம இனத்தோட மானத்தைக் காப்பாத்தப் போராடிக்கிட்டு இருக்கு. இதுதான் திராவிட மாடல்.
அடிமை மாடல்னா என்ன? நம்ம தன்மானத்தை, சுயமரியாதையை தூக்கிட்டு போய் மோடி கால்கிட்ட வைக்கிறது. தேவையானப்போ இவனுங்க எப்படின்னா ஒரு கதை சொல்றேன் உங்களுக்கு.
விஜய் மீது தாக்கு
ஒரு பெரிய கிணறு இருந்ததாம், தமிழ்நாடு ஒரு கிணறுன்னு வச்சுக்கோங்களேன். அதுல ஒரு தவளைகளோட சாம்ராஜ்யம் இருக்கு, தவளைகளெல்லாம் நல்லா வாழ்ந்துகிட்டு இருக்கு. அவங்களுக்கு நடுவுல ஏதோ மனஸ்தாபம் இருந்தாலும், பேசிக்கிட்டு ஒரு மாநிலம் மாதிரி வாழ்ந்துகிட்டு இருக்கு. அதுல ஒருத்தன் என்ன பண்ணுவான் ‘டேய்! நான்தான் ஆள்றேன், நான்தான் தலைவனாகுவேன்’ அப்படின்னு சொல்லுவான் – எடப்பாடியோ, படப்பாடியோ யாரோ… அல்லது விஜய்யோ, யாரோ.
அப்போ தவளைகள் என்ன சொல்லுதாம் ‘அப்பப்பா! அப்படி எல்லாம் திடீர்னு ஆயிட முடியாதுயா. இங்க வா, நீ இந்த தவளையோட இந்த கிணறு இருக்குல்ல அதை பத்தி உனக்கு என்ன தெரியும்? இதோட தன்மானம் காப்பாத்துறதுக்கு என்ன பண்ணுவ? எங்களை காப்பாத்துறதுக்கு என்ன பண்ணுவ? கல்வி என்ன தருவ?’ அதெல்லாம் சொன்னதுக்கு அப்புறம் ‘அதெல்லாம் முடியாது, நான் ஆயிடுவேன்’னு சொல்லுது. ‘அப்படிலாம் ஆயிட முடியாதுயா கொஞ்சம் விழுந்தா தான், அடிபட்டா தான் தெரியும் இரு’னா… ‘இல்ல இல்ல’ன்னு கோச்சுக்கிட்டு வெளிய போயிடுச்சு.
அந்த வெளிய போகும்போது என்னன்னா ஒரே ஒரு ஓட்டை இருக்கும். அது தவளைகளுக்கு மட்டும்தான் தெரியும் உள்ள வர்றதுக்கும் வெளிய போறதுக்கும். ஒரு உள்ளூர் காரனை விட்டா வெளியூர் காரனை விடமாட்டோம்ல? தவளை வெளிய போச்சு, அங்க BJP என்கிற பாம்பு நிக்கிது. பார்த்தவுடனே சாப்பிட வந்தா, ‘யோ! என்ன சாப்பிடாதயா, சாப்பாடு ஐயா அந்த கிணறுல நிறைய இருக்கு. டேய் வழி இல்லடா எப்படி போறது? நான் கூட்டிட்டு போறேன், நீ வந்துட்டு என்னை அங்க தலைவன் ஆக்கிடு’ அப்படின்னு சொல்லி அந்த பாம்பை உள்ள இழுத்துட்டு வர்றானுங்க இப்போ.
வேற வர முடியலல இங்க? உள்ள வந்து என்ன நடக்கும்? இந்த தவளை என்ன சொல்லுது மத்த தவளைங்க கிட்ட ‘டேய்! நம்மளுக்குள்ள பேசிக்கி முடிக்க வேண்டிய விஷயம், நம்ம மாநிலம் நல்லா இருக்கணும்டா, வெளியில இருந்து ஏன்டா இந்த பாம்பை கொண்டு வந்த?’ – ‘அதெல்லாம் முடியாது, இவனை பிடிக்கல இவனும் எதிர்க்கிறான் கேளு, இவன் மேல ED கேஸ் போடு, இவன் மேல அந்த கேஸ் போடு, இந்த கேஸ் போடு’ன்னு நாலஞ்சு பேரை முடிச்சாச்சு. அதுக்கப்புறம் இதுக்கு தெரியாதது என்னன்னா, அதுக்கப்புறம் ‘போ’ன்னு சொன்னா பாம்பு போகாது. இவனையும் சாப்பிட்டு எல்லாரையும் சாப்பிட்டு இங்கேயே இருக்கும்.
இதுதான் அடிமை மாடல். இந்த பாருங்க வெட்கம், சூடு, சொரணை இந்த அடிமை மாடல்ல கொஞ்சம்கூட இல்ல. மகளிர் இருக்காங்களே அந்த உரிமையைப் பற்றி ஒரு சட்டம் எடுத்துட்டு வரணும்னு திடீர்னு நேத்து ராத்திரி நம்ம ஊர் எம்பி கிட்ட கேட்டேன். எங்க போயிட்டு இருக்கேன்? நான் மதுரைக்கு வர்றேன்னு சொன்னேன். ‘என்னடா திடீர்னு கூப்பிட்டு இருக்கார் மன்னர்?’ அப்படின்னு போயிருக்கார். அங்க போனா அதுக்குள்ள Delimitation பாஸ் பண்றான். அதாவது இது ரொம்ப முக்கியமானது. ஏன்னா இது பாஸ் ஆயிடுச்சுன்னா 50 ஆண்டுகால தென்னிந்தியாவுக்கு இருக்கிற பிரச்சனையே அரசியல் மாறிடும்.
உங்களுக்கு பெரும்பான்மை இருந்தா அரசியல்ல ஜெயிக்கலாம், ஆட்சி பிடிக்கலாம் அதுவரைக்கும் தான் பெரும்பான்மை. அதுக்கப்புறம் அந்த பெரும்பான்மையைத் தாண்டி சமத்துவம், சகோதரத்துவம் அதைப்பத்தி பேசணும். இவங்க பெரும்பான்மை தான் பேசுவாங்க.
நான் எதுக்கு சூடு சொரணை இல்லாம பேசுறேன்னா, இந்த எடப்பாடியோ இந்த மத்த கட்சிகளோ இருக்காங்க இல்ல… இந்த அடிமை மாடல். தமிழ்நாட்டுக்கு துரோகம் நடந்துகிட்டு இருக்கு. தேர்தல் நேரத்தில் எவ்வளவு தைரியம் இருந்தா அவன் பண்ணுவான். வாயை மூடிக்கிட்டு நிக்கிறான் பாருங்க. இந்த மாடல் நமக்கு தேவையா? இந்த மாடல் நமக்கு தேவையா?
இன்னொரு மணிப்பூராகும் மதுரை..அடுத்து பழனி
திருப்பரங்குன்றம் நடக்குறத பத்தி நான் பேச தேவையில்லை. என்ன நடக்குது அங்க? மதுரையை இன்னொரு மணிப்பூர் ஆக்கப் போறானுங்க அவனுங்க. அங்கிருந்து ஸ்ட்ரைட்டா பழனிக்கு வருவாங்க. இதுதான் இவங்களோட வேலை. இங்க வந்து முப்பாட்டன்னு சொல்லிட்டு இருக்காங்க பழனிய. கிறிஸ்தவர் அதிகமா இருந்தா பெத்லகேம் இந்தியால தான் இருந்தது, இயேசு கிறிஸ்து இங்கதான் பிறந்தாருன்னு சொல்லி இருப்பாங்க.
இவனுக்கு ஹிந்துக்கள் மேல இருக்குற அன்பு இல்ல, அதிகாரம் வேண்டும். அது மட்டும் தான் வேணும். இதுக்கான பதில் நீங்க கொடுக்க வேண்டியது தான் ஒரு தேர்தல்.
சினிமா மாடல் முதல்வர்
சினிமா மாடல்ன்னு ஒன்னு இருக்கு. ஒரே சினிமால காச சம்பாதிச்சிடலாம்ப்பா, பெரிய ஹீரோ ஆயிடலாம், ஸ்டார் ஆயிடலாம். சினிமால ஓகே. ஒரு சினிமாக்குள்ள நீ டாக்டராகலாம், இன்ஜினியராகலாம், முதல்வர் கூட ஆகலாம். அரசியல்ல அப்படியே முதல்வர் ஆயிடுவ நீ.
யாரு அரசியல் பேசணும்? என் அளவுக்கு அரசியல் பேசுறியாப்பா பேசிருக்கியாப்பா நீ? இத்தனை வருடங்கள்ல தமிழ்நாட்டிற்கோ, மக்களுக்கோ, மொழிக்கோ, தன்மானத்துக்கோ பிரச்சனை வந்திருக்கும் போது வந்து நின்னு இருக்கியா? உன்னுடைய உங்களுடைய உங்க மேல மக்கள் வெச்சிருக்கிற நட்பு, அன்பு திறமைக்கு அரசியலுக்கு இல்லை. அதை பயன்படுத்துறீங்க. வெயில்ல கியூ நின்னு கட்-அவுட்டை போட்டு, டிக்கெட்டை போட்டு, வீட்டை பத்தி யோசிக்காம, வேலையை விட்டு காட்டுன அன்பை இப்போ அரசியல் வரணும்னு அதுக்கு பயன்படுத்துறீங்களடா?
இப்ப பாருங்க, நடிகனுக்கு ரொம்ப பிடிச்சா மூணு வருட தொண்டையில விட்டு விசில் அடிக்கலாம், நாட்டை கொடுக்க முடியாது. நாட்டை கொடுக்க கூடாது. அரசியல் வேற, சினிமா வேற. அந்த அன்பு வேற, இந்த அன்பு வேற. அதுக்கு இறங்கணும், பேசணும். சீமான் பரவாயில்லையேப்பா 10 வருஷமா மக்களைப் பத்தி பேசிட்டு இருக்காரு.
பெரிய பெரிய நடிகர்கள் அதெல்லாம் ஆகாது. அதை பத்தி இருக்கட்டும். சோ திராவிடியன் மாடல் வேணுமா? அடிமை மாடல் வேணுமா? சினிமா மாடல் வேணுமா? ஏன்னா அரசியல் யார் பண்ணனும்ங்கிற ஒரு கேள்வியை நான் மக்கள் கிட்ட கேக்குறேன். என்னை பொறுத்தவரைக்கும் அரசியல் மக்கள் நாம பண்ணனும். ஜெயிச்சவங்க வேலை பாக்கணும். ஆனா இந்த இந்தியாவில ஜெயிச்சவங்க அரசியலைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க, நாம வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதை மாத்தணும். நம்ம அரசியல்ன்னா யாரைத் தேர்ந்தெடுக்கிறோம், யாரைத் தேர்ந்தெடுக்கிறோம். இந்தியாவோட அரசியல் என்ன? இன்னைக்கு எதுக்கு தமிழ்நாடு எதற்கெல்லாம் நிக்குது? அதுக்கு யார், எந்த அணி? எந்த அணி நம்மளோட நிக்கும், தமிழுக்காக துடிக்கும்? அதை யோசிக்கணும்.
கடைசியா ஒரே ஒரு வார்த்தை சொல்றேன். இதோ அதிமுக அணிக்கும், திமுக அணிக்கும் நடக்கிற தேர்தலா இல்லை. விஜய் சொல்ற மாதிரி திமுகக்கும், டிவிகேக்கும் நடக்கிற தேர்தல் இல்லை. இது ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் நடுவுல நடக்கும் தேர்தல்.
ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் நடக்குற தேர்தல். தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாடு எப்பவுமே இந்தியாவுக்கு ஒரு மாடலா நின்னு இருக்கு. எதைத் திணிக்கும் போதும் ஹிந்தி திணிக்கட்டும், நீட் திணிக்கட்டும், எதிர்த்து நிற்கிறோம். இன்னும் வலுவா நிற்கணும்னா எந்த அணிக்கு ஓட்டு போடணும்னு நீங்க தான் முடிவு பண்ணனும். அரசியல் மக்களான நாங்க செய்ய வேண்டிய நிலைமை வந்தாச்சு. ஒற்றுமையா பிரிவினையா? நல்லதே நடக்கும். இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.
