டிஜிட்டல் திண்ணை: ரிசல்ட்டை ‘முடிவு’ செய்த பாஜக.. கை கழுவிய ‘9 தொகுதிகள்’ லிஸ்ட்.. பரபர தகவல்!

Published On:

| By Mathi

Digital Thinnai BJP

வைஃபை ஆன் செய்ததும், “ஓட ஓட ஓட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. விரக்தி டோன் மாதிரி தெரியுது?

ADVERTISEMENT

அப்படியா தெரியுது.. நாம சொல்லப் போறது பாஜகவோட ஸ்கெட்ச்சை பத்திய்யா..

பாஜகவைப் பொறுத்தவரைக்கும் முழு வீச்சுல தமிழ்நாட்டுல வேலை செய்யுது.. மோடி வர்றாரு.. அமித்ஷா பேசுறாரு.. மத்திய அமைச்சர்கள் தங்கியே வேலை செய்யுறாங்க.. 27 தொகுதிகளில்ல மேக்சிமம் எவ்வளவு ஜெயிக்க முடியுமோ ஜெயிக்கனும்னு கங்கணம் கட்டிகிட்டு வேலை செய்யுறங்கப்பா.. இதுக்காக 27 தொகுதிகளையும் கேட்டகிரி வைஸ் பிரிச்சு ஒர்க் பண்ணிகிட்டு இருக்கிறதாம் பாஜக..

ADVERTISEMENT

அதென்னய்யா ”கேட்டகிரி வைஸ்”?

இதை பத்தி பாஜக சீனியர் தலைவர்கள்கிட்ட நாம பேசுனப்ப, “நாங்க எப்பவுமே பொத்தாம் பொதுவாக வேலை பார்க்குறது இல்லை.. ஸ்கெட்ச் போட்டுதான் பார்ப்போம்..

ADVERTISEMENT

இந்த டைம் நாங்க 27 தொகுதிகளில்ல நிற்கிறோம் இல்லையா? இந்த 27 தொகுதிகளையே 3 கேட்டகிரிகளாக பிரிச்சு வெச்சிருக்கிறோம்..

அதாவது நிச்சயமா ஜெயிப்போம்னு நம்புறது A, கொஞ்சம் ஊசலாட்டமா அங்கிட்டு இங்கிட்டுமா இருக்கிறது B, நிச்சயமா ஜெயிக்கவே மாட்டோம்னு தெரிஞ்சது C-ன்னுதான் கேட்டகிரி பிரிச்சுருக்கோம்..

நாங்க நிச்சயமாக ஜெயிப்போம்னு நினைக்கிற A கேட்டகிரியில,

ஊட்டி
அவிநாசி
கோவை வடக்கு
மொடக்குறிச்சி
திருப்பூர் தெற்கு
ராசிபுரம்
மதுரை தெற்கு
சாத்தூர்
வாசுதேவநல்லூர்
நாகர்கோவில்னு 10 தொகுதிகள் இருக்கு… இந்த 10 தொகுதிகளிலேயும் பணத்தை தாராளமா செலவு செய்ய சொல்லி இருக்காங்க..

அடுத்ததா நாங்க ஜெயிக்கவே மாட்டோம் அப்படிங்கிற C கேட்டகிரியில 9 தொகுதிகள் இருக்கு.

ஆவடி
திருவண்ணாமலை
தளி
திருப்பத்தூர்
திருவாரூர்
தஞ்சாவூர்
கந்தர்வகோட்டை
அறந்தாங்கி
மானாமதுரை இந்த 9 தொகுதிகளுமே ஜெயிக்கவே மாட்டோம் அப்படிங்கிற C கேட்டகிரியில இருக்கிறதால இங்க செலவே செய்ய வேண்டியது இல்லைன்னு முடிவுல இருக்கிறோம்..

இது போக

மயிலாப்பூர்
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
திருச்செந்தூர்
ராதாபுரம்
குளச்சல்
பத்மநாபபுரம்
விளவங்கோடு.. இந்த 8 தொகுதிகளிலும் ரிசல்ட் எப்படியும் வரலாம்னு ஊசலாட்டம் இருக்கிறதால இங்கேயும் தேவையான அளவு செலவு செய்ய சொல்லி இருக்காங்க”ன்னு சொல்றாங்கய்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share