டிஜிட்டல் திண்ணை: எட்டிப் பார்க்கும் ராகுல்.. எகத்தாளமாக பேசும் பிரவீன்.. ஏக கோபத்தில் ஸ்டாலின்!

Published On:

| By Mathi

Digital Thinnai Rahul Stalin N

வைஃபை ஆன் செய்ததும், ”கண்ணாமூச்சி ஆட்டம்னா இத்தனை ரகமா இருக்கு?”ன்னு கேள்வி கேட்டபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

யாருடைய கண்ணாமூச்சி ஆட்டம்யா?

ADVERTISEMENT

ராகுல் காந்திதான்.. ஒருவழியாக ஏப்ரல் 18-ந் தேதி தமிழ்நாட்டுக்கு ராகுல் காந்தி பிரசாரத்துக்கு வரப் போறதா சொல்லி இருக்காங்க..

அதுவும் பொன்னேரி, சோளிங்கர், துறையூர்னு காங்கிரஸ் வேட்பாளர்கள் நிற்கிற தொகுதிகளில்ல மட்டும் ஒரே நாளில் ராகுல் பிரசாரம் செய்யுறாராம்..

ADVERTISEMENT

அப்ப ஸ்டாலினுடன் சேர்ந்து பிரசாரம் இல்லையா?

இல்லைன்னு சொல்ல முடியலையே.. ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதற்கான முயற்சிகளை திமுக தொடர்ந்துதான் டிரை பண்ணிகிட்டு இருக்கு.. இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “ராகுல் ஒருநாள் மட்டும் பிரசாரம் வர்றாருன்னு சொல்லி இருக்காங்க.. அவரு பேசுற 3 இடத்துல ஏதாவது ஒன்னுல சிஎம் ஸ்டாலின் சேர்ந்து பேச ஏற்பாடு செய்யலாமா? அப்படி இல்லைன்னா அந்த 3 இடம் இல்லாம இன்னொரு இடத்தில் ரெண்டு பேரும் சேர்ந்து பிரசாரம் செய்யலாமா?ன்னு கேட்டிருக்கிறோம்.

ADVERTISEMENT

அதுக்கு, மேற்கு வங்க தேர்தலையே காரணமா சொன்னாங்க.. நாங்களும், ஏப்ரல் 29-ந் தேதிதான மேற்கு வங்கத்துல 2-ம் கட்ட தேர்தல்.. அதனால ஏப்ரல் 19 அல்லது 20-ல் கூட ஒரு நாள் பிக்ஸ் பண்ணினா அன்னைக்கு கூட ஸ்டாலினும் ராகுலும் சேர்ந்து பிரசாரம் செய்யலாமுன்னு சொல்லி இருக்கிறோம்.. அவங்களும் பார்க்கிறோம்னு சொல்லி இருக்காங்க” என்றனர்.

திமுக சைடுல இப்படி ராகுலுடன் இணைந்து பிரசாரம் செய்ய சீரியஸா முயற்சி செஞ்சுகிட்டு இருக்காங்க.. ஆனா வழக்கம் போல காங்கிரஸுல ‘எகத்தாள’ குரல் வரத்தான் செய்யுது…

யாருய்யா அந்த ‘எகத்தாள’ குரல்..?

வேறு யாருய்யா.. பிரவீன் சக்கரவர்த்திதான்.. திமுக கூட கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கும்போதே விஜய்யை பார்த்து பேசி குழப்பம் விளைவிச்ச சாட்சாத் அதே பிரவீன்தான் இப்ப, “காங்கிரஸ் மேலிடம் சொல்லித்தான் விஜய்யை பல முறை சந்திச்சேன்.. அப்ப மூத்த நிர்வாகி ஒருத்தரும் என் கூடத்தான் இருந்தாரு.. நாங்க கேட்ட மாதிரி கூடுதல் தொகுதிகளை கொடுக்காம ராகுல் காந்தி பிரசாரத்துக்கு வரனும்னு எதிர்பார்க்கிறது எல்லாம் எப்படி சரியாக இருக்கும்?னு பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.. இது திமுகவை ரொம்பவே டென்ஷனாக்கிவிட்டுருச்சுய்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share