50 லட்சம் கோடி சம்பாதித்தும் உங்களுக்கு ஆசை தீரவில்லையா? – எடப்பாடியை விளாசிய செங்கோட்டையன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Sengottaiyan's response to Edappadi Palaniswami

ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆப்பக்கூடல் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “எடப்பாடி பழனிசாமி 10 முறை தோற்றவர். இவருக்கு ஓட்டு போடலாமா?” என்று கேட்டார். “நான் ஆட்சிக்கு வருவேன். திமுகவை வீழ்த்துவேன்” என்கிறார் பழனிசாமி. பவானி பகுதியில் 2000 கோடிக்கு அட்டை ஃபேக்டரி சிங்கம்பேட்டை அருகில் 3000 கோடிக்கு கரி ஃபேக்டரி வைத்திருக்கிறார். இங்கே மட்டும் 5000 கோடி இருக்கிறது. 50 லட்சம் கோடி சம்பாதித்தும் உங்களுக்கு ஆசை தீரவில்லையா?

“புரட்சித் தலைவி அம்மாவுக்குப் பிறகு நான் தான் முதலமைச்சராகி இருக்க வேண்டும். ஏமாந்து விட்டேன். இரவு வரை நான் தான் முதலமைச்சராக இருந்தேன். காலையில் மாறிவிட்டது. ஏனென்றால் அவரிடம் பெட்டி இருந்தது, என்னிடம் பெட்டி இல்லை.காலையில் சசிகலா என்னிடம் கேட்டபோது, ‘யாரோ ஒருவர் இருந்துவிட்டுப் போகிறார். கட்சி உடையாமல் பார்த்துக் கொள்ளலாம்’ என்று தெரிவித்தேன். ‘நீங்கள்தான் முதலமைச்சர்’ என்று சசிகலா சொல்லி அவர் தோளைப் பிடித்தார். திடீரென மலைப்பாம்பு மாதிரி கீழே விழுந்து நீந்திக்கொண்டு வந்தார். நானே சேரில் இருந்து எழுந்துவிட்டேன்.

ADVERTISEMENT

காலைப் பிடித்துக் கெஞ்சியவர் இன்று‘இவள் யார்? என்னை முதலமைச்சராக்குவதற்கு எனக்குத் தனியாகத் தகுதி இருக்கிறது என்றால், இப்படி யாராவது சொல்வார்களா?’ என்று கேட்டார்.

டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை கழற்றிவிட்டார். இவரை காப்பாற்றிய பாஜகவிற்கு 2024-ல் அல்வா கொடுத்துவிட்டார். அதற்குப் பிறகு பிரேமலதா விஜயகாந்தை காலி செய்துவிட்டார்.

ADVERTISEMENT

அண்ணாமலை என்ன பாவம் செய்தார்? பாஜகவில் இருக்கும் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் தான் நான் வருவேன் என்றார். ‘என்னையா? உலகம் எவனும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. 50 லட்சம் கோடி கொள்ளையடித்தது பத்தாது, இன்னும் 50 லட்சம் கோடி வேண்டும்’ என எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார்.

இன்று முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி குறித்து குறித்த எடப்பாடி விமர்சனத்தையும் சுட்டிக்காட்டி சாடினார்.

ADVERTISEMENT

தனது படங்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள், சி.பி.ஐ வழக்குகள் என பல்வேறு தடைகளைத் தாண்டி அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு ஆதரவாக விசில் சின்னத்திற்கு வாக்களிக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share