விஜய் அரசு விரித்த வலையில் வலிய விழுந்த திமுக-டாக்டர் கிருஷ்ணசாமி

Published On:

| By Mathi

Delimitation: Dr Krishnaswamy Alleges DMK Fell into Vijay’s Trap

தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிரான முதல்வர் விஜய்யின் சட்டசபை தீர்மானத்தை திமுக ஆதரித்ததை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி (Dr Krishnaswamy) விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளதாவது: நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையில் சட்டத் திருத்தம் எதுவும் கொண்டு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும், அரசியல் சாசன விதிகள் 81 மற்றும் 82-இன்படி 2026-2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு சட்டரீதியாகத் தானாகவே நடந்தேறிவிடும்.

ADVERTISEMENT

இந்த சூழ்நிலையில், அரசியல் சாசன விதிகளை பற்றிய புரிதலின்றி “தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை” என தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட, தமிழக நலனைப் பறிகொடுக்கும் தீர்மானத்தை திமுகவும் ஆதரித்துள்ளது.

இதன் காரணமாக, விஜய் விரித்த வலையில் திமுக வலிய சிக்கிக் கொண்டதாகவே இன்றைய நிகழ்வு உணர்த்துகிறது.

ADVERTISEMENT

கடந்த காலங்களில் ஒவ்வொரு மாநில, தேசிய விஷயங்களில் அரசியல் ரீதியாக முடிவெடுக்கும் திமுக, இன்றைய தீர்மானத்தை அவசரப்பட்டு ஆதரித்து விட்டதாகவே கருத வேண்டி இருக்கிறது. இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share