கலாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு… சரிந்த சன் டிவி பங்குகள்!

Published On:

| By Selvam

சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் தொலைக்காட்சி நிறுவனங்கள், திரைப்பட தயாரிப்பு, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, வானொலி ஆகியவற்றை நடத்தி வருகிறது. kalanithi maran sun tv shares fall

இந்தநிலையில், சன் நெட்வொர்க் குழுமத்தின் தலைவரும் தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி-யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், சன் டிவியின் 12 லட்சம் பங்குகளை கலாநிதி மாறன் முறைகேடாக மாற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய அதேவேளையில், வர்த்தக உலகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், இன்று வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில், சன் டிவியின் ஒரு பங்கின் விலை 4%-க்கும் மேல் சரிந்து ரூ.588 ஆக வர்த்தகமானது.

ADVERTISEMENT

பங்குகள் சரிவை சந்தித்துள்ள நிலையில், மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தைக்கு சன் நெட்வொர்க் நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில், “ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை, ஊகத்தின் அடிப்படையிலானவை. இது சன் நெட்வொர்க்கின் வணிகத்திலோ, அன்றாட செயல்பாடுகளிலோ எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பங்குதாரர்களின் குடும்ப விஷயங்கள் தனிப்பட்ட விவகாரங்களை சார்ந்தவை” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share