அரிசி ஏற்றுமதியில் இந்தியா ஆதிக்கம்!

By Balaji

|

Published on 11 Jan 2018, 12:00 AM

2017ஆம் ஆண்டில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 22 சதவிகிதம் உயர்ந்துள்ளது. வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் அதிகளவில் அரிசியை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்ததால், இந்தியா மொத்தம் 1.23 கோடி டன் அளவிலான அரிசியை ஏற்றுமதி செய்து சாதனைப் படைத்துள்ளது.

அரிசி ஏற்றுமதியில் இந்தியாவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்திலிருக்கும் தாய்லாந்தை விட, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு நம் நாட்டிலிருந்தே அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பாஸ்மதி தவிர்த்துப் பிற அரிசி வகைகள் ஏற்றுமதி 1.23 கோடி டன்னாக உள்ளது. இதில் வங்கதேசம் மட்டும் 38 சதவிகித உயர்வுடன் 84 லட்சம் டன் அளவிலான அரிசியை இந்தியாவிடமிருந்து வாங்கியுள்ளது. ”சென்ற ஆண்டு முழுவதும் வங்கதேசம் இந்தியாவிடமிருந்து அதிகளவில் அரிசி வாங்கியதின் மூலம் ஆப்பிரிக்க நாடுகளில் இந்திய அரிசிகளின் தேவை குறைந்ததை ஈடுகட்ட முடிந்தது” என்று ஆந்திர மாநிலத்தின் அரிசி ஏற்றுமதி நிறுவனமான ஸ்ரீ லலிதாவின் நிர்வாக இயக்குநர் எம்.ஆதிஷங்கர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

2018ஆம் ஆண்டுக்கான அரிசி ஏற்றுமதியில் பாஸ்மதி அரிசி தவிர்த்துப் பிற அரிசி வகைகளே பெரும் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பாஸ்மதி அரிசி ஏற்றுமதி அளவு 40 லட்சம் டன்னாக மட்டுமே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அனைத்திந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவரான விஜய் செடியா கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், “வங்கதேசம் மற்றும் இலங்கை நாடுகளின் இருப்பு நிலைகளைப் பொறுத்தே நம் நாட்டின் அரிசி ஏற்றுமதி இருக்கும். ஆப்பிரிக்க நாடுகள் தாய்லாந்திடமிருந்து பெருமளவில் அரிசியை வாங்கத் தொடங்கியுள்ளன” என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel