Ditwah Cyclone Updates: காவிரி ’டெல்டா’ கரையில் நாளை கால் பதிக்கும் ‘டிட்வா’ புயல்

By Mathi

|

Published on 28 Nov 2025, 11:07 AM

Ditwah Cyclone Updates

வங்க கடலில் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வரும் ‘டிட்வா’ புயலின் மேற்கு பகுதி நாளை நவம்பர் 29-ந் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களின் கரையை தொடும் என தனியார் வானிலை ஆய்வாளரான ‘டெல்டா’ வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளதாவது: இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் நகர்ந்து வரும் டிட்வா புயலின் முன் பகுதி அதாவது மேற்கு பகுதி காவிரி டெல்டா மாவட்ட நிலப்பரப்பின் மீது நாளை நவம்பர் 29-ந் தேதி கால்பதிக்கும்.

ADVERTISEMENT

இதனால் இன்று நவம்பர் 28-ந் தேதி இரவு முதல் நவம்பர் 30-ந் தேதி காலை வரை முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இன்று இரவு துவங்கி நாளை காலைக்குள் நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும்.

ADVERTISEMENT

நாளை குறுகிய நேரத்தில் தீவிர மழைக்கும், அதீத கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் பொதுமக்களும் மீனவர்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel