அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி!

By Kavi

|

Published on 7 Nov 2026, 4:38 PM

அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தை தமிழக அரசு விரிவுப்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

தகுதியுள்ள விவசாயிகள் அனைவருக்கும் தலா ரூ.75,000 வரை கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக கூடுதல் நிதியாக ரூ.2,842.774 கோடியை விடுவித்து தமிழக அரசு அரசாணை இன்று (நவம்பர் 7) வெளியிட்டுள்ளது. 

புதிய அரசாணையின் படி, ரூ.75,000 வரை கடன் பெற்ற  5,90,621 விவசாயிகளின் கடன் தொகை முழுவதும் (100%) தள்ளுபடி செய்யப்படும்.

ADVERTISEMENT

ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்ற 7,34,260 விவசாயிகளுக்கு அதிகபட்சமாகத் தலா ரூ.75,000 வரை தள்ளுபடி பெறத் தகுதி கிடைக்கும்.

விரிவுபடுத்தப்பட்ட இத்திட்டத்தினை முழுமையாகச் செயல்படுத்த உத்தேசமாக ரூ.9,062.83 கோடி தேவைப்படுகிறது. இதில் ஏற்கெனவே அரசால் விடுவிக்கப்பட்ட ரூ.6,024 கோடி போக, எஞ்சியுள்ள நிதியில் தற்போது ரூ.2,842.77 கோடியை விடுவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

தள்ளுபடிக்குத் தகுதியான பயிர்க் கடன்களுக்கான கால வரையறை 01.05.2025 முதல் 31.03.2026 வரை நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel