விஜய்க்கு சிபிஎம் பெ.சண்முகம் சரமாரி கேள்வி!

Published On:

| By Mathi

CPM Shanmugam's Fierce Questions to CM Vijay

காவிரி பிரச்சனைக்காக பெங்களூருவில் பேச்சுவார்த்தை நடத்த செல்லும் தமிழக முதல்வர் விஜய், வரும் போது காவிரி நீரை தூக்கிக் கொண்டு வருவாரா? என தவெக ஆட்சிக்கு ஆதரவு தரும் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று ஜூலை 30-ந் தேதி இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பெ. சண்முகம் பேசியதாவது: நம்முடைய தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் ஆகஸ்ட் 3-ந் தேதி கர்நாடகாவுக்கு சென்று கர்நாடகத்தினுடைய முதலமைச்சரை சந்திக்க இருப்பதாக உறுதியான தகவல்கள் வந்திருக்கின்றன.

ADVERTISEMENT

இப்ப நான் என்ன கேட்க விரும்புறேன், இப்ப அங்க போய் என்ன செய்ய போறீங்க? காவிரி நீரை தூக்கிட்டு வர போறீங்களா? காவிரியில் 3,500 கன அடி நீரைக் கூட தர முடியாது என்று இன்றைக்கு மேலாண்மை ஆணயத்தில் நேரடியாக தெரிவித்துளது கர்நாடகா. உங்களால காவிரி நீரை வாங்கி வர முடியாது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்பது கர்நாடகாவின் கோரிக்கை. காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று ஏற்கனவே தமிழ்நாடு சட்ட பேரவையில் விரிவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

இத்தகைய சூழ்நிலையில் எதற்காக இப்போது கர்நாடகாவுக்கு நம்முடைய முதலமைச்சர் செல்ல வேண்டும் என்கிற கேள்வியை நான் எழுப்புகிறேன்.

பெங்களூரு பயணத்தை முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். அப்படி முதல்வர் விஜய், பெங்களூரு செல்வதனால் எதையும் செய்ய முடியாது. இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share