எதிர்ப்பை மீறி ஆக.3-ல் விஜய் பெங்களூரு பயணம்!

Published On:

| By Mathi

Vijay Travels to Bengaluru Defying Opposition

தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களின் எதிர்ப்பை மீறி முதல்வர் விஜய், காவிரி பிரச்சனை குறித்து பேசுவதற்காக கர்நாடகா மாநிலம் பெங்களூரு செல்கிறார். முதல்வர் விஜய்யின் பெங்களூரு பயணத்தை அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் உறுதி செய்துள்ளார்.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரை உடனே திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் டெல்லியில் இன்று ஜூலை 30-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார், காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட முடியாது. ஆகஸ்ட் 3-ந் தேதி தமிழக முதல்வர் விஜய், பெங்களூரு வருகிறார். முன்னதாக ஆகஸ்ட் 2-ந் தேதி கர்நாடகா அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.

ADVERTISEMENT

இதனிடையே கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. மண்டியாவில் முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட போஸ்டர்களை கன்னட அமைப்பினர் கிழித்து போராட்டம் நடத்தினர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share