சீதாராம் யெச்சூரி காலமானார்

Published On:

| By Kavi

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்டம்பர் 12) காலமானார்.

இடதுசாரி தலைவர்களில் முதுபெரும் தலைவராக திகழ்ந்த சீதாராம் யெச்சூரி உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் தொற்றுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஐசியுவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

எனினும் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாமல் கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று முன் தினம் சிபிஎம் கட்சி தெரிவித்திருந்தது.

அவர் மீண்டு வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து கூறியிருந்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி தனது 72 வயதில் இன்று காலமானார் சீதாராம் யெச்சூரி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் யெச்சூரி செயல்பட்டு வந்தார்.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அந்த பொறுப்பை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

“இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்… ஆனால் : மீண்டும் பேசுபொருளான துரைமுருகனின் பேச்சு!

ஸ்டாலினை எதிர்த்து திருமா மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறாரா?: அமைச்சர் முத்துசாமி பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share