பாஜக + திமுக + அதிமுக எனும் கொள்கை புடலங்காய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லை. திமுக வெளியில் வேறு உள்ளே வேறு என்று சிபிஎம் விமர்சித்துள்ளது.
திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளது. இந்த விவகாரத்தில், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தை கடுமையாக விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.
‘பெ.சண்முகத்தின் உண்மை முகம் -1 ‘ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த கட்டுரையில், “திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி அமைய ஆதரவு என்ற நோக்கத்திலேயே சிபிஎம், தவெகவை ஆதரித்துள்ளது. தவெகவின் ஆட்சியை ஆதரிக்கும் சிபிஎம் மாநிலச் செயலாளருக்கு எந்தவித கொள்கையும் இல்லை” என்று மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
மேலும், “தவெக ஆட்சியை ஆதரிக்கும் சிபிஎம் சண்முகமும், அதிமுகவின் சி.வி. சண்முகமும் ஒரே நேர்கோட்டில்தான் நிற்கிறார்கள். இருவருக்குமே கொள்கை, புடலங்காய் என்று ஏதும் இல்லை” எனவும் அதில் விமர்சிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக + திமுக + அதிமுக எனும் கொள்கை புடலங்காய் சிபிஐ(எம்)-க்கு எப்போதும் இல்லை. திமுக வெளியில் வேறு, உள்ளே வேறு” என்று பதிலடி கொடுத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎம் பகிர்ந்துள்ள இந்த படத்திற்கு பலரும் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
நெட்டிசன்களின் சில பதிவுகள்
Ck Suriua Ck Suriya
வாச்சாத்தி வன்கொடுமை காரண கர்த்தா செங்கோட்டையனுடன் கைகுலுக்கி உறவாடி கம்யூனிசத்தை வியாபாரம் செய்யும் சண்முகத்தை எந்த புடலங்காயில் சேர்ப்பது
Kannan Srinivasan Kannan
இல்லாத விசயங்களைப் பேசி விஜய்க்கு முட்டு கொடுக்கும் மார்க்சிஸ்ட்டுகள்
ஐ.செல்வம் உசிலம்பட்டி
எத்தனை கம்யூனிஸ்ட் தலைவர்களை பார்த்து இருக்கேன் இப்ப இருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் விஜய் கட்சியினுடைய கொள்கை பரப்புச் செயலாளர் போல் செயல்படுகிறார்
Thangavel Thangavel
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்பதால் தவெக அரசு அமைந்திட ஆதரவு அளித்தோமென இடதுசாரிகள் சொல்வது உண்மையென்றால் இதே நிலையை தேர்தலுக்கே முன்பே மேற்கு வங்கத்திலும் எடுத்து மம்தாவை ஆதரித்திருக்க வேண்டும் அல்லவா.
ஆதரித்திருந்தால் அங்கும் பாஜக ஆட்சி அமைவதை தடுத்திருக்கலாம் அல்லவா.
மாறாக மம்தாவின் தோல்விக்கு பாஜகவோடு சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடியவர்கள் கம்யுனிஸ்ட்டுகள்.
எனவே மாநிலத்துக்கொரு கொள்கையை சிபிஎம் கடைபிடிப்பதுதான் மிகப்பெரிய நகைச்சுவை.
தவெக அரசு திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றதோடு பாஜக கூட்டணியில் அமமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்,மற்றும் அதிமுகவின் அதிருப்தி குழுவினரின் 25 உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றபோது சிபிஎம் கட்சியின் கொள்கை புடலங்காய் ஊர்மேயப்போனதா?
Abdul Jaleel K A
இது TVK voice பொய்யை மூலதனமாக கொண்டு திரும்ப திரும்ப கட்டமைக்கும் திமுக எதிர்ப்பு பிரச்சாரம் அதனை இன்று cpim கையில் எடுத்திருப்பது வெட்க கேடு.
பீபி அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பு அதிமுக திமுக கூட்டணி பேச்சுவார்த்தை என்பதால் TVK ஆதரவு என்றார் பின்பு அது உண்மை இல்ல ஆதாரம் இல்லை என்றார் அப்போதே உங்கள் நம்பக தன்மை கேள்வி குறியாக மாறி விட்டது.
இன்று இழிவான அரசியல் திறன் இல்லாத நிர்வாகம் என்ற நிலையில் உங்கள் ஆதரவுடன் ஒரு கட்சி ஆட்சி செய்கிறது அதனை சீர் செய்ய வாய் திறக்க முடியாத முகமூடி அணிந்த நிலையில் உள்ளீர்கள் ஆனால் இன்று இப்படியான ஒரு பிரச்சாரம் மேற்கொள்கிறீர்கள் எந்த அடிபடையில் என்ன அவர்கள் பிஜேபி உடன் திட்டம் தீட்டி உள்ளார்கள் என்பதை சொல்லாமல் சொல்வதாக இருந்தால் உங்கள் நம்பக தன்மை இன்று TVK உடன் கரைந்து விட்டது என்பதே உண்மை…
ஆதரவு தெரிவிக்கும் வரை ஸ்டாலின் உடன் இணைந்து பயணம் என்று சொல்லி கொண்ட நீங்கள் இன்று இந்த நிலைக்கு உண்டான காரணங்களை சொல்ல எது தடுக்கிறது வெங்கடேசன் அவர்களின் பேட்டியின் போதே உங்கள் அந்தரங்க உடன் படிக்கை அடுத்த தேர்தலுக்கான கையொப்பம் என்பது மக்கள் புரிந்து கொண்டார்கள்…
வென்றது திமுக வின் ஒட்டு அந்த கூட்டணி ஓட்டு நிச்சயம் cpim தழகத்தில் எந்த இடத்தில் உள்ளீர்கள் என்பதை சிந்தித்து கொண்டு உங்கள் விமர்சனங்களை வையுங்கள் ….
Mohamed Ismail Abdul Muthalib
எப்ப ஒருத்தன் விஜயை ஜோதிபாசு அவர்களுடன் ஒப்பிட்டு பேசியதை காதிருந்தும் செவிடர்களாய், வாய் இருந்தும் ஊமைகளாய் இருந்தீர்களோ, அப்பவே தமிழ்நாட்டில்
மிச்ச மீதி இருந்த கம்யூனிஸ்டின் மரியாதை மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டு விட்டது
Aktar Ayub
புடலங்காய், மேற்கு வங்காளத்தில் இலட்சக்கணக்கான தோழர்கள் மம்தாவை எதிர்க்க வேண்டும் என்பதற்க்காக பாஜகவில் சங்கமித்து அழுகிய தக்காளியாக மாறிப்போனதை தாங்கள் மறப்பதாக நடித்தாலும் மக்கள் தெளிவாகவே அறிவார்கள்!
தமிழ்க்குமரன் மாதவன்
அப்போ அவங்க தயவுல வென்ற MP, MLA பதவிகளை ராஜினாமா பண்ணிட்டு, இப்போ இருக்க மக்கள் நல கூட்டணி 2.0ல நின்று வெல்லுங்கள் பார்க்கலாம்
வெற்றி கொண்டான்
திமுக கொள்கை புடலங்காயுடன் சேர்ந்து ஜெயித்துவிட்டு இன்று தவெக கொள்கை புடலங்காய் கிடைத்துவிட்டதே என அலைவது கேவலமாக இல்லையா.
என்ன கம்யூனிச பொடலங்கா அரசியலோ போங்க
