விஜயின் சட்டமன்ற நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது – சுப்பராயன்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் சட்டமன்ற செயல்பாடுகள் கவலை அளிப்பதாகத் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, “எங்கே அப்பாவைக் காணோம்?” என்ற குட்டிக்கதை மூலம் மு.க. ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார். மேலும் ஸ்டாலின் செய்த சைகையை அவரே சட்டமன்றத்தில் செய்து காட்டினார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.இது குறித்து திருப்பூர் எம்பி கே. சுப்பராயன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

ADVERTISEMENT

இது குறித்து திருப்பூர் எம்பி கே.சுப்பராயன் தனது முகநூல் பக்கத்தில் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

“மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களின் சட்டமன்ற நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது! ‘எங்கே அப்பாவைக் காணோம்’ என்று சட்டமன்றத்தில் சொன்ன கேலிச்சொல்லும் அப்போது அவரது செயலும், அவர் வகிக்கும் பொறுப்பிற்கு ‘மாண்பானதாக’ அமையவில்லை!

ADVERTISEMENT

அவைக்குள், கண்ணியக் குறைவான கேலியும் கிண்டலும் பொருத்தமற்றதாகும்! அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆற்றிய எதிர்வினையும் கண்ணியத்தை மேலும் காயப்படுத்தி விட்டது! இதுகுறித்து பேரவைத் தலைவரின் மௌனம் கவலை அளிக்கிறது!”என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விஜய் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில் அக்கட்சி எம்பியின் விமர்சனம் தமிழக அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share