Delimitation: மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவை அறிமுகம் செய்ய வாக்கெடுப்பு- திமுக எதிர்ப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

DMK

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக, மூன்று நாள்கள் சிறப்பு அமா்வு இன்று(ஏப்ரல் 16) காலை தொடங்கியது.

மக்களவை – பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் இந்த அமா்வு நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்களை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் இன்று தாக்கல் செய்தார். யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டவுடன் காங்கிரஸ் தரப்பில் திரும்பப் பெற வலுயுறுத்தப்பட்டது.
இந்திய கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் இது; அரசியல் சாசனத்தையே கபளீகரம் செய்ய நினைக்கிறது பாஜக. இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் காங்கிரஸ் எம்பி வேணுகோபால் தெரிவித்தார்.

ADVERTISEMENT

திமுகவின் நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, “3 மசோதாக்களையும் தனித்தனியாக தாக்கல் செய்ய அரசு முன்வரவில்லை.ஒன்றோடு ஒன்று இணைத்து சாண்ட்விச் போல தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 மசோதாக்களையும் பிரித்து பார்ப்பதற்குகூட சிரமமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்கிறது. ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யப்படுவதற்கான அவசியமில்லை. தொகுதி மறுவரையறைக்காக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாவை அரசு தாக்கல் செய்துள்ளது.

ADVERTISEMENT

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருப்புக் கொடியேற்றி, மசோதாவின் நகலை எரித்துப் போராட்டம் நடத்தியுள்ளார். நாங்கள் மகளிருக்கான இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். தொகுதி மறுவரையறை செய்யாமல் தற்போதைய எண்ணிக்கையைக் கொண்டு உடனடியாக மகளிருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துங்கள். அதேசமயம் தொகுதி மறுவரையறை மசோதாவை சமரசம் இன்றி எதிர்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர்.

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவை அறிமுகம் செய்ய வாக்கெடுப்பு நடைபெற்றது.

மொத்தம் = 333/543
ஆதரவு =251
எதிர்ப்பு =185
வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் மத்திய அரசு கொண்டு வந்த 3 மசோதாக்களும் மக்களவையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share