திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி

Published On:

| By Pandeeswari Gurusamy

cpi

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறது.

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டி தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான சிபிஐ கட்சியின் மாரிமுத்து மீண்டும் களம் காண்டார். அவருக்கு எதிராக அதிமுகவின் பாலதண்டாயுதம் மற்றும் தவெக சார்பில் எஸ்.பாண்டியன், நாதக சார்பில் வினோதினி ஆகியோர் போட்டியிட்டநிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

மாரிமுத்து 74,062 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தவெக வேட்பாளர் எஸ். பாண்டியனை 12,922 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share