இந்த திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரும் மார்ச் 14 ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில் முதல்வரை சந்திக்கும் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பட்ஜெட் கோரிக்கைகளை அளித்து வருகிறார்கள். Coimbatore district divide in budget
இப்படித்தான் இன்று (மார்ச் 6) சென்னை தலைமை செயலகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வுமான ஈ.ஆர் ஈஸ்வரன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், “வருகின்ற நிதிநிலை அறிக்கையில் கொங்கு மண்டல பகுதி வளர்ச்சிக்கும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்குவது சம்பந்தமாக முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன்.
சேலம், நாமக்கல் மாவட்டங்கள் பயன் பெறுகின்ற திருமணிமுத்தாறு திட்டம், கொங்கு மண்டலம் முழுவதுமே பயன் பெறுகின்ற பாண்டியாறு – பொன்னம்புழா திட்டம், ஆனைமலையாறு நல்லாறு திட்டம் என்று நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றி தர வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறேன்.
மேலும் கோவையை பிரித்து பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு பொள்ளாச்சி தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கையை முதல்வரிடம் வலியுறுத்தினேன்.
அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கு காலிங்கராயன் பெயரையும் சேர்த்து “காலிங்கராயன் அத்திக்கடவு திட்டம்” என்று பெயர் வைக்க வேண்டும். அதுதான் காரணப்பெயராக இருக்கும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன்” என்றார்.
இதுமட்டுமல்லாமல்… திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலுக்கு மாற்று பாதை அமைக்கப்பட வேண்டும், நாமக்கல் மாவட்டம் கபிலர் மலையில் ஒரு தீயணைப்பு நிலையம் வேண்டும், நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையில் காவல் நிலைய வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் ஈஸ்வரன் ஸ்டாலினிடம் முன் வைத்துள்ளார்.
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே பல்வேறு புதிய மாவட்ட கோரிக்கைகள் வலுப்பெற்ற வண்ணம் இருக்கின்றன, கடலூரில் இருந்து விருத்தாசலம், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம், கோவையில் இருந்து பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்ட கோரிக்கைகள் நீண்ட காலமாக இருக்கின்றன. 2021 தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் இதை வாக்குறுதியாகவும் அளித்தார்.
ஆனால் தமிழக அரசின் நிதி நிலவரம் சுமுகமாக இல்லாததால், புதிய வருவாய் மாவட்டம் அமைக்கும் திட்டம் அப்படியே இருக்கிறது. புதிய மாவட்டங்கள் அமைக்கப்பட வேண்டுமென்றால்… ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கட்டிட செலவுகள் உட்பட, அடிப்படை தொடக்க நிலைச் செலவு 7000 கோடி ரூபாயாவது தேவைப்படும். Coimbatore district divide in budget
இந்நிலையில் இந்த பட்ஜெட்டிலாவது புதிய மாவட்டங்கள் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் உருவாகியிருக்கிறது. ஆனால் நிதிப் பிரச்சினைதான் நந்தியாக நின்றுகொண்டிருக்கிறது. Coimbatore district divide in budget