பட்ஜெட் பரிதாபங்கள்… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட போன்ல பேசிக்கிட்டு இருந்தேன்.

“என்னடா மாப்ள… இன்னைக்கு பட்ஜெட்ல 12 லட்சம் வரை சம்பளம் வாங்குறவங்களுக்கு இனிமே வருமான வரி கிடையாதுன்னு சொல்லிருக்காங்க. ஹாப்பி தான் உனக்குன்னு” சொன்னேன்.

“அடேய்… பெட்ரோல் போடுறதுக்கு கூட வழியில்லாம ஒவ்வொருத்தன் கிட்டயா பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன். காலையிலேயே கடுப்புகள கிளப்பாம போனை வச்சிருன்னு” டென்ஷனாகி போனை வச்சிட்டான்.

பாவம்… நம்ம நிர்மலா சீதாராமன் மேடமோட அசாத்திய திறமைகள்ளாம் இன்னும் இவன மாதிரி ஆளுங்களுக்கு தெரியலன்னு நினைச்சா தான் வருத்தமா இருக்கு.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…. update kumaru memes jokes

ச ப் பா ணி

மெடிக்கல் டெஸ்ட் எடுக்கும் போது நெகடிவ் சிந்தனையே மேலோங்கி இருக்கும்

✒️Writer SJB✒️

கெஜ்ரிவால் டெல்லியில் பணத்தை கொள்ளை அடித்து மற்ற மாநிலங்களில் கொண்டு போய் கொட்டி அங்கு தன் கட்சியை வளர்க்கிறார்- மோடி

நீங்க தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி கொள்ளை அடிச்சு உத்திரபிரதேசத்தில் கொண்டு போய் கொட்டி உங்க கட்சியை வளர்க்கிறீங்களே அப்படியா ஜி? update kumaru memes jokes

ச ப் பா ணி

Its ok என்பதில் கொட்டித் தீர்க்க வேண்டிய அத்தனை கோபமும் ஒளிந்திருக்கும்

கோழியின் கிறுக்கல்!!

காலம் கணக்கு வாத்தியார் போலவே,

நாம் கவனிக்காதப் பொழுது முக்கியமான பாடத்தை கற்றுக் கொடுத்து விடுகிறது!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஏன்னே நாதஸை அடிச்சீங்க..?

பின்ன என்னப்பா..? 12 லட்சத்துக்கு மேல சம்பளம் இருந்தா தான் நாட்டு முன்னேற்றத்துக்கு பங்களிக்க முடியும், அதனால சம்பளத்தை அதிகம் பண்ணுங்க முதலாளின்னு கேட்கறாம்ப்பா..

மெத்த வீட்டான்

வெறித்தனமாக பார்த்த கிரிக்கெட்டை ஒரு செய்தியாக வெறுமனே கடந்து சென்றால் நீங்கள் குடும்பஸ்தன் ஆகிவிட்டதாக அர்த்தம் ! update kumaru memes jokes

ArulrajArun

அவசரமா எங்கயாவது கிளம்பி போகும் போது ட்ராஃபிக் சிக்னல நாம கடைசியா நின்னுட்டு இருப்போம் கிரீன் சிக்னல் விழுந்து நாம அதை Cross பண்றதுக்குள்ள ரெட் சிக்னல் விழும் போது வரும் பாருங்க ஒரு கோவம்..

Sasikumar J

“இரண்டு இட்லிக்கு நாலு வகை சட்னி வச்சுக் கொடுத்தால் அது ஹோட்டல்,

பத்து இட்லியா இருந்தாலும் பலநாட்களுக்கு முன்ன அரைச்ச ஒரே பொடி வச்சுக் கொடுத்தால் அது ஹோம்” update kumaru memes jokes

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share