’கரப்பான்கள்’ போராட்டம் தொடரும்- அபிஜீத் திப்கே

Published On:

| By Mathi

Cockroaches protest will continue - Abhijeet Dipke

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டாலும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை ’காக்ரோச்’ ஜனதா கட்சி போராட்டம் தொடரும் என்று அதன் நிறுவனர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வலியுறுத்தி 32 நாட்களாக கார்க்சோ ஜனதா கட்சி போராடி வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக 26 நாட்களாக, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டம் இன்று ஜூலை 24-ந் தேதி கைவிடப்பட்டது. மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, ஜிதேந்திர பிரசாத் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை சோனம் வாங்சுக் கைவிடுவதாக அறிவித்தார்.

ADVERTISEMENT

இதனையடுத்து காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே தமது எக்ஸ் பக்கத்தில், “சோனம் சார் தன் 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் என்ற செய்தி எங்களுக்கு மிகுந்த நிம்மதியை தருகிறது. சோனம் வாங்சுக்கின் அசாதாரணமான துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் எங்களது நன்றி. சோனம் வாங்சுக் தமது சொந்த வாழ்வைப் பணயம் வைத்து இந்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறார். இந்த தேசத்துக்கு சோனம் வாங்சுக் உயிர் விலைமதிப்பற்றது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை ஜந்தர் மந்தரில் எங்களது போராட்டம் நீடிக்கும்” என அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share