ஊழல் புகாரில் யாராவது சிக்கினால் உடனடியாக பதவி பறிக்கப்படும் என அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஜூலை 16-ந் தேதி முதல்வர் விஜய் தலைமையில் 2-வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் 40 நிமிடங்கள் நடைபெற்றது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய்,
- அரசின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய அமைச்சர்கள் கவனமாக செயல்பட வேண்டும்; அதிகாரிகள் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்
- பள்ளிகளுக்கு தேவையில்லாமல் ஆய்வு செய்ய செல்லக் கூடாது
- பள்ளிகளுக்கு சென்று ரீல்ஸ் போடக் கூடாது; ரீல்ஸ் போடுவதில் கவனமாக இருக்க வேண்டும்; கட்சியினருக்கும் அறிவுரை வழங்க வேண்டும்
- ஊழல் முறைகேடு புகாரில் சிக்கினால் அமைச்சர்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும்; தெரிந்தவர்கள்- தெரியாதவர்கள் என யாரையும் பார்க்கமாட்டேன்.
- நமது அரசு ஊழல், லஞ்சம், முறைகேடு ஆகியவற்றில் ஈடுபடாத அரசாக இருக்க செயல்பட வேண்டும் என எச்சரித்தார்.
