சிவி சண்முகத்துக்கு ’ஷாக்’ கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

Published On:

| By Mathi

AIADMK: EPS Removes 11 Key Loyalists of CV Shanmugam

அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேர் மீது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியை உருவாக்கியதால் விழுப்புரம் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த சி.வி. சண்முகம் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பசுபதியை நியமித்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் பசுபதி மற்றும் சிவி சண்முகம் ஆதரவாளர்களிடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில் சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பதவிகளை பறித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

விழுப்புரம் மாவட்டத்தில் சிவி சண்முகத்தின் ஆதரவாளர்களான

ADVERTISEMENT
  1. ஆனந்தி – மாவட்ட கழக இணைச் செயலாளர்
  2. வெங்கடேசன் – மாவட்ட கழகப் பொருளாளர்
  3. ஜெயபிரகாஷ் – மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்
  4. பாஸ்கரன் – மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்
  5. எழில்ராஜ் – விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர்
  6. நடராஜன் (எ) கிருஷ்ணன் – வல்லம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்
  7. விஜயன் – மயிலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்
  8. கிருஷ்ணமூர்த்தி – ஒலக்கூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்
  9. பன்னீர் – ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்
  10. ரூப்ராஜ் – திண்டிவனம் நகரக் கழக செயலாளர்
  11. செந்தில்குமார் – மயிலம் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்
    ஆகியோரது கட்சி பதவிகளை பறித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share