முதல்வர் விஜய் அமைச்சரவை.. அமைச்சர்களுக்கான சீனியாரிட்டி வெளியீடு.. யாருக்கு எந்த இடம்?

Published On:

| By Mathi

TN CM Vijay Cabinet List

முதல்வர் விஜய் (Vijay) தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான சீனியாரிட்டி விவரங்கள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் பதவியேற்ற போது அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதன் பின்னர் 2 முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது முதல்வர் விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 35 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

முதல்வர் விஜய்க்கு அடுத்து அமைச்சரவையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையனுக்கு 5-வது இடம் தரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் விஸ்வநாதனுக்கு 11-வது இடம்; காங்கிரஸின் மற்றொரு அமைச்சர் ராஜேஷ்குமாருக்கு 12-வது இடம்; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர் ஷாஜஹானுக்கு 13-வது இடம்; விசிக அமைச்சர் வன்னி அரசு-க்கு 14-வது இடம் தரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த அமைச்சரவையில் சுற்றுச் சூழல் அமைச்சர் ராஜீவுக்கு 35-வது இடம் தரப்பட்டுள்ளது.

சீனியாரிட்டி அடிப்படையில் முதல்வர் விஜய் அமைச்சரவை..

தமிழ்நாடு அமைச்சரவைப் பட்டியல் (30 மே 2026)

ADVERTISEMENT
எண்அமைச்சர் பெயர்பதவி / துறை
1சி. ஜோசப் விஜய்முதலமைச்சர் (பொது, பொது நிர்வாகம், இ.ஆ.ப (IAS), இ.கா.ப (IPS), இ.வ.ப (IFS), மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புத் திட்ட அமலாக்கம், சிறப்பு முயற்சிகள், வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புறக் கடன்பட்டிருத்தல், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல்)
2என். ஆனந்த்ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் (ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியம், பாசனம், சிறு பாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டங்கள்)
3ஆதவ் அர்ஜுனாபொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் (பொதுப்பணி (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாடு)
4டாக்டர் கே.ஜி. அருண்ராஜ்சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
5கே.ஏ. செங்கோட்டையன்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் (வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், கலெக்டர்கள், பேரிடர் மேலாண்மை, பூமிதானம், கிராமதான் மற்றும் சட்டப்பேரவை)
6பி. வெங்கடராமணன்உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் (உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு)
7ஆர். நிர்மல்குமார்ஆற்றல் மூலங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் (மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்பு, ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டு)
8ராஜ்மோகன்பள்ளி கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் (பள்ளி கல்வி, தொல்லியல், தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படத் தணிக்கைச் சட்டம், செய்தித்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்சகம்)
9டாக்டர் டி.கே. பிரபுஇயற்கை வளங்கள் துறை அமைச்சர் (கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்)
10எஸ். கீர்த்தனாதொழில்துறை அமைச்சர் (தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு)
11பி. விஸ்வநாதன்உயர்கல்வித்துறை அமைச்சர் (தொழில்நுட்பக் கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர்கல்வி)
12எஸ். ராஜேஷ் குமார்சுற்றுலாத்துறை அமைச்சர் (சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்)
13ஏ.எம். ஷாஜகான்சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் (சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்ஃப் வாரியம்)
14வன்னி அரசுசமூக நீதித்துறை அமைச்சர் (ஆதிதிராவிடர் நலன் மற்றும் மலைவாழ் பழங்குடியினர்)
15ஏ. விஜய் தமிழன் பார்த்திபன்போக்குவரத்துத் துறை அமைச்சர் (மோட்டார் வாகனச் சட்டங்கள் நிர்வாகம், போக்குவரத்து, தேசியமயமாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனச் சட்டம்)
16பி. ராஜ்குமார்வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் (வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகர திட்டமிடல் திட்டங்கள் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, தங்குமிடக் கட்டுப்பாடு, சிஎம்டிஏ (CMDA), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி)
17வி. சம்பத் குமார்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் (பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்)
18எம். விஜய் பாலாஜிகைத்தறி, துணிநூல் மற்றும் கதர்துறை அமைச்சர் (கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம்)
19கே. விக்னேஷ்மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
20கே. தென்னரசுவெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் (வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள்)
21ஜெ. முகமது பர்வாஸ்தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் (தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, எடைகள் மற்றும் அளவைகள், நகர்ப்புற மற்றும் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் கொத்தடிமை தொழிலாளர் நலன்)
22வி. காந்திராஜ்கூட்டுறவுத் துறை அமைச்சர் (கூட்டுறவு)
23கே. ஜெகதீஸ்வரிசமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் (மகளிர் நலன், காப்பகங்கள் மற்றும் சீர்திருத்த நிர்வாகம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் மற்றும் சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட சமூக நலன்)
24வினோத்வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் (வேளாண்மை, வேளாண் பொறியியல், வேளாண் சேவை கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, சர்க்கரை, கரும்பு ஆயத்தீர்வை, கரும்பு மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு)
25சி. விஜயலட்சுமிபால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் (பால் மற்றும் பால்வள மேம்பாடு)
26டி. சரத்குமார்மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் (மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்)
27ரமேஷ்இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் (இந்து சமயம் மற்றும் அறக்கட்டளைகள்)
28பி. மதன் ராஜாகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் (குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள் உள்ளிட்ட ஊரகத் தொழில்கள்)
29என். மரிய வில்சன்நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் (நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள், திட்டமிடல் மற்றும் வளர்ச்சி)
30ஸ்ரீநாத்மீன்வளத்துறை அமைச்சர் (மீன்வளம், மீன்வள வளர்ச்சிக் கழகம்)
31எஸ். கமலிகால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
32ஆர். குமார்செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்
33ஆர்.வி. ரஞ்சித்குமார்வனத்துறை அமைச்சர் (வனங்கள்)
34டி. லோகேஷ் தமிழ்செல்வன்வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் (வணிகவரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், கந்துவட்டி ஒழிப்புச் சட்டம், சீட்டு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பதிவு உள்ளிட்ட கடன் நிவாரணம்)
35ராஜீவ்சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் (சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காலநிலை மாற்றம்)
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share