தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழ்நாட்டின் 57 எம்.பி.க்களுக்கும் முதல்வர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒன்றிய அரசு, தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில், ஒன்றிய அரசால் மேற்கொள்ள உத்தேசித்துக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையரைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந்தாய்வுக் கூட்டம் 8.8.2026 (சனிக்கிழமை) அன்று பிற்பகல் 3.00 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் (3-ஆம் தளம்) நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் புதுதில்லியுள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணியின் 32 எம்.பி.க்கள்
திமுக கூட்டணியில் மக்களவையில் திமுகவுக்கு 22 எம்.பிக்களும் மாநிலங்களவையில் 8 எம்.பிக்களும் உள்ளனர். மாநிலங்களவையில் திமுகவின் கூட்டணி கட்சிகளான தேமுதிக, மநீமவுக்கு தலா 1 எம்.பி உள்ளனர். நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணிக்கு மொத்தம் 32 எம்.பிக்கள் உள்ளனர்.
தமிழகத்தின் 57 எம்.பிக்கள் விவரம்
திமுக: 22
- டி.ஆர்.பாலு
- கனிமொழி கருணாநிதி
- எஸ்.ஜெகத்ரட்சகன்
- ஆ.ராசா
- தயாநிதி மாறன்
- செல்வகணபதி டி.எம்.
- டாக்டர் கலாநிதி வீராசாமி
- தமிழச்சி தங்கபாண்டியன்
- செல்வம்
- கதிர் ஆனந்த்
- மணி
- அண்ணாதுரை
- தரணிவேந்தன்
- மலையரசன்
- மாதேஸ்வரன் வி.எஸ்.
- கே.இ.பிரகாஷ்
- கணபதி ராஜ்குமார்
- ஈஸ்வரசாமி
- தங்க தமிழ்செல்வன்
- அருண் நேரு
- முரசொலி
- டாக்டர் ராணி ஸ்ரீகுமார்
காங்கிரஸ்- 9
- மாணிக்கம் தாகூர்
- கார்த்தி சிதம்பரம்
- ஜோதிமணி
- விஷ்ணுபிரசாத்
- விஜய் வசந்த்
- சசிகாந்த் செந்தில்
- கோபிநாத்
- ராபர்ட் புரூஸ்
- சுதா
விசிக-2
- திருமாவளவன்
- ரவிக்குமார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)-2
- சுப்பராயன்
- செல்வராஜ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – சிபிஐ (எம்)-2
- சு.வெங்கடேசன்
- சச்சிதானந்தம்
மதிமுக-1
துரை வைகோ
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (யூ.எம்.எல்)-1
நவாஸ்கனி
மாநிலங்களவை எம்.பி.க்கள்- 18
திமுக- 8
- திருச்சி சிவா
- பி. வில்சன்
- ஆர். கிரிராஜன்
- கே.ஆர்.என். ராஜேஷ்குமார்
- எஸ். கல்யாணசுந்தரம்
- எஸ்.ஆர். சிவலிங்கம்
- சல்மா
- கான்ஸ்டண்டைன் ரவீந்திரன்
அதிமுக- 4
- தம்பிதுரை
- எம். தனபால்
- ஆர். தர்மர்
- இன்பதுரை
காங்கிரஸ்- 3
- ப.சிதம்பரம்
- கிறிஸ்டோபர் திலக்
பாமக-1
அன்புமணி ராமதாஸ்
மநீம-1
கமல்ஹாசன்
தேமுதிக- 1
எல்.கே. சுதீஷ்
