சட்டென மேடையில் இருந்து இறங்கிய முதல்வர் விஜய்.. காரணம் என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவிக் கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 பேருக்குப் பணி நியமன ஆணைகளைத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று வழங்கினார்.

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், மின்சார வாரியத்திற்குத் தேர்வானவர்களில் ஒருவரான அட்சய லட்சுமி என்ற நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணும் கலந்துகொண்டார். இதைக் கவனித்த தமிழக முதல்வர் விஜய், மேடையை விட்டு கீழே இறங்கி நேரடியாகச் சென்று அட்சய லட்சுமிக்குத் தனது கைகளால் பணி நியமன ஆணையை வழங்கினார்.

ADVERTISEMENT

தேர்வான அட்சய லட்சுமிக்கு வரும் ஜூன் 28ஆம் தேதி பிரசவத்திற்கான தேதி என கூறப்படுகிறது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் விழா அரங்கில் இருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share