கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் இன்று (ஜூன் 12) வழிபாடு செய்தார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் பயணமாக முதல்வர் விஜய் டெல்லி சென்றார். நேற்று நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் டெல்லி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்று கர்நாடகம் வந்தார் விஜய்.
மங்களூர் விமான நிலையம் வந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து கார் மூலம் உடுப்பி மாவட்டம், கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்கு வந்தார் .
இந்த கோயிலுக்குள் ஷர்ட் அணிந்து செல்லக் கூடாது. இதனால் சால்வை மட்டும் அணிந்துகொண்டு உள்ளே சென்றார். முதல்வர் விஜய்யுடன் அவரது பாதுகாவலர் நயீம், உதவியாளர் ராஜேந்திரன், தவெக இணை பொருளாளர் ஜெகதீஷ், ஆந்திர தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் உடன் சென்றனர்.
கோயிலுக்கு மூகாம்பிகையிடம் மனமுருகி விஜய் வேண்டினார். அம்மனுக்கு வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார். அவருக்கு கோயில் நிர்வாகம் பூரண கும்ப மரியாதை வழங்கியது. சுமார் அரை மணி நேரம் வழிபாடு செய்த விஜய், சத்ரு சம்ஹார பூஜை நிறைவடைந்ததும் வெளியே வந்தார்.
எதிரிகளை வெல்லவும், தடைகளை நீக்கவும், காரிய சித்தி பெறவும் செய்யப்படும் சத்ரு சம்ஹார பூஜை செய்யப்படும்.
இந்த மூகாம்பிகை கோயிலில் தமிழகத்திலிருந்து முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
