கடந்த முறை மிஸ்ஸிங்… இந்த முறை மீட்டிங்… டெல்லியில் யார் யாரைச் சந்தித்தார் முதல்வர் விஜய்?

Published On:

| By Kavi

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய் முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பொறுப்பேற்றார். இன்றுடன் அவர் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிறது. மே 27ஆம் தேதி முதல் முறை​யாக டெல்லி சென்று பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்​தித்​தார்.  அப்போது தமிழகத்துக்கான நிதி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று (ஜூன் 10) டெல்லி சென்றார். பிரதமர் மோடி தலை​மை​யில் அனைத்து மாநில முதல்​வர்​களு​ட​னான நிதி ஆயோக் கூட்​டம், டெல்​லி​யில் நாளை (ஜூன் 11) நடை​பெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக் சென்ற் விஜய், இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.

கடந்த முறை டெல்லி சென்ற போது விஜய் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் வந்தது பேசு பொருளானது.

ADVERTISEMENT

இந்தசூழலில் இன்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தியை ஆகியோரை  இன்று மாலை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்புகள் நடைபெற்றதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share