தியேட்டர்களில் அமைச்சர்கள்… தலைமைச் செயலகம் வராத முதல்வர் விஜய்

Published On:

| By Kavi

முதல்வர் விஜய் இன்று (ஜூலை 23) தலைமைச் செயலகத்துக்கு வரவில்லை.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பிறகு தினந்தோறும் தவறாமல் தலைமைச் செயலகத்துக்கு வந்து அலுவல் பணிகளை மேற்கொள்வார்.

ADVERTISEMENT

இந்த சூழலில் இன்று அவரது நடிப்பில் ஜனநாயகன் படம் வெளியாகி இருக்கிறது.

இதை அமைச்சர்கள் என்.ஆனந்த், அருண் ராஜ், முகமது பர்வேஸ், ஶ்ரீநாத், ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசித்தனர்.

ADVERTISEMENT

நேற்று இரவே அடையாரில் உள்ள தாகூர் ஃபிலிம் சிட்டியில் தனது கடைசி படத்தை முதல்வர் விஜய் பார்த்து ரசித்தார். விஜய்யுடன் அவரது குடும்பத்தினரும், தலைமைச் செயலாளர் சாய் குமார் உள்ளிட்ட தலைமைச் செயலக அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் படம் பார்த்துள்ளனர்.

இந்த சூழலில் படம் திரையரங்குகளில் வெளியான இன்று முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்துக்கு செல்லாதது பேச பொருளாகி இருக்கிறது.

ADVERTISEMENT

முதல்வர் ஏன் தலைமை செயலகத்துக்கு வரவில்லை, வேறு ஏதாவது நிகழ்ச்சிக்கு செல்கிறாரா? அல்லது இதற்கு பின் தலைமை செயலகத்துக்கு வருவாரா என எந்த விவரமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share