உடல் எடையை சூப்பரா குறையணுமா? – இந்த 5 உணவுகளை மிஸ் பண்ணிடாதீங்க..!

Published On:

| By Santhosh Raj Saravanan

chicken to watermelon For weight loss foods to Become slim

உடல் எடையை வேகமாக குறைத்து ஸ்லிம்மாக மாற 5 உணவுப் பொருட்களின் பட்டியலைப் பார்ப்போம்.

தற்போதைய வாழ்க்கை சூழல் மாற்றம், உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது, முறையான தூக்கமின்மை காரணமாக உடல் எடை அதிகரித்துவிடுகிறது. ஆனால், அதிகரித்த உடல் எடையை குறைக்க முடியாமல் பலரும் சிரமப்படுவதை பார்க்க முடிகிறது. பலர் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்தாலும் எடை குறையவில்லை என்று குறை கூறுகிறார்கள். உடல் எடை குறைய (weight loss tips) வேண்டுமானாலும் உடற்பயிற்சியோடு உணவுக் கட்டுப்பாடும் மிகவும் முக்கியமானது. யாராலும் திடீரென உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிவிட முடியாது. ஆகவே, உணவுக் கட்டுப்பாட்டில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இங்கு உடல் எடையை குறைத்து நம்மை ஸ்லிம்மாக மாற்றும் 5 முக்கிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

ADVERTISEMENT
காலிஃபிளவர் மற்றும் ப்ரோக்கோலி

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் காலிஃபிளவர் மற்றும் ப்ரோக்கோலியை (broccoli and cauliflower) சேர்த்துக்கொள்ளலாம். 100 கிராம் காலிஃபிளவர் மற்றும் ப்ரோக்கோலியில் தலா 40 கிராம் கலோரிகள் உள்ளன. ப்ரோக்கோலியில் வைட்டமின் கே மற்றும் சி சத்துக்கள் அதிகமாக உள்ளன. காலிஃபிளவரில் வைட்டமின் B12 அதிகமாக உள்ளது. இதனால் உடல் எடையை குறைக்க இவை இரண்டும் உதவி புரிகின்றன.

கோழி இறைச்சி

நமது உணவில் கோழி இறைச்சியை மிதமான அளவில் சேர்த்துக்கொள்ளலாம். கோழி இறைச்சியில் கலோரிகள் மிகவும் குறைவு. 100 கிராம் கோழிக்கறியில் குறைந்த கலோரிகள் உள்ளன, புரதம் அதிகளவில் உள்ளது. ஆனால், சிக்கனை (chicken for weight loss) ஒருபோதும் எண்ணெயில் பொரித்து சாப்பிடக்கூடாது. அது உடல் எடை அதிகரிப்புக்கே வழிவகுக்கும். நீங்கள் அதை கிரில் அல்லது தந்தூரியாக சுட்டு சாப்பிடலாம். அதிக எண்ணெய் பயன்படுத்தாமல் குழம்பு வைத்தும் சாப்பிடலாம்.

ADVERTISEMENT
முட்டை

உணவில் வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் முட்டையின் வெள்ளைக் கருவைச் சாப்பிடுவது சிறந்தது. பசி எடுக்கும்போதெல்லாம் முட்டையின் வெள்ளைக் கருவைச் (egg white protein) சாப்பிடலாம். அது உங்கள் பசியைக் கட்டுப்படுத்துகிறது. முட்டையில் அதிக அளவு புரதம் உள்ளது. நமது பசியைக் கட்டுப்படுத்த முட்டையின் வெள்ளைக் கருவே சிறந்த உணவாகும். இது உடல் எடை குறைப்புக்கும் மிகுந்த உதவியாக உள்ளது.

உருளைக்கிழங்கு

100 கிராம் உருளைக் கிழங்கில் 90 கிராம் கலோரிகள் (Potato benefits) உள்ளன. இவற்றில் கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன. இது நமது பசியைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால், உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது பிரெஞ்சு ஃப்ரைஸில் இதைவிட 4 மடங்கு அதிக கலோரிகள் உள்ளன. ஆகவே, அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக, நீங்கள் மசித்த உருளைக் கிழங்கை மசாலாப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.

ADVERTISEMENT
தர்பூசணி

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக தர்பூசணி (watermelon benefits) சாப்பிட வேண்டும். 100 கிராம் தர்பூசணியில் வெறும் 30 கிராம் கலோரிகள் மட்டுமே உள்ளன. இதில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. நீங்கள் விரும்பும் எந்த அளவிலும் இதை உட்கொண்டு, உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது உடல் எடை குறைப்புக்கு அதிகமாக உதவி புரிகிறது.

மேற்குறிப்பிட்ட ஐந்து உணவுகளும் உங்கள் உடல் எடையைக் குறைக்க நிச்சயமாக உதவும். எனவே, உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் இவற்றைத் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share