உடல் எடை குறைப்பு (Weight Loss) முதல் சரக்கரை கட்டுப்பாடு வரை பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.
பாகற்காய் என்பது சந்தைகளில் எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று. குறிப்பாக நம் வீட்டுத் தோட்டத்தில் விதையை தூவிவிட்டு எந்த பராமரிப்பும் இல்லை என்றாலும் கூட காய்களை தரக்கூடியதுதான் பாகற்காய். பாகற்காயின் கசப்பு சுவை காரணமாக அதனை பலர் விரும்புவதில்லை. ஆனால், பாகற்காய் (Bitter gourd) சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக பாகற்காய் ஜூஸ் உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்தவும், பல நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. பாகற்காய் ஜூ தயாரிப்பது எப்படி, அதனை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பாகற்காய் – 2
- எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – 1 குவளை
செய்முறை
முதலில் பாகற்காயை நன்கு கழுவிவிட்டு தோலை லேசாக உரிக்க வேண்டும். அதன் மையப்பகுதியில் உள்ள விதைகளை அகற்ற வேண்டும். உங்களுக்கு அதிக கசப்பு பிடிக்கவில்லை என்றால் நறுக்கிய பாகற்காயை சிறிதளவு உப்புடன் 10-15 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு கழுவலாம். பிறகு நறுக்கிய பாகற்காயை மிக்சியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். அதனை வடிகட்டி பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு (Lemon benefits) மற்றும் கருப்பு உப்பைச் சேர்க்கவும். இப்போது நமக்கு பாகற்காய் ஜூஸ் ரெடி. இதனை உடனடியாக குடிப்பது அதிக பலன்களைத் தரும்.
பாகற்காய் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் நன்மை பயக்கும். இது உடலில் ரத்த சர்க்கரை (juice For diabetes) அளவை சீராக்க உதவுகிறது. பாகற்காய் சாறு உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. இது கல்லீரல் மற்றும் ரத்தம் இரண்டையும் சுத்தப்படுத்துகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
பாகற்காய் செரிமான சக்தியை வலுப்படுத்துவதோடு, வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் (Bitter gourd improves digestion) போன்ற பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. பாகற்காய் ரத்தத்தைச் சுத்திகரிப்பதால் தெளிவான மற்றும் பொலிவான சருமம் கிடைக்கிறது. இது முகப்பருக்கள் மற்றும் பருக்களுக்கும் உதவுகிறது.
உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது
பாகற்காய் சாற்றில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடை குறைப்பிற்கு (weight loss drink) உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. பாகற்காய் ஜூஸை வெறும் வயிற்றில் அதிக அளவில் அருந்துவதைத் தவிர்க்கவும்.பாகற்காய் ஜூஸ் கசப்பாக இருந்தாலும் அதிலிருந்து ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
