சிக்கன், மட்டன் லிவரில் உள்ள நன்மைகள் மற்றும் அவற்றில் எது சிறந்தது என்று பார்ப்போம் (Chicken Liver vs Mutton Liver)
இந்தியாவில் உள்ள பெரும்பாலான அசைவப் பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடியதில் முதல் இடத்தில் சிக்கன் தான் உள்ளது. அடுத்த இடத்தில் மட்டன் மற்றும் மீன் ஆகியவை இருந்து வருகின்றன. தங்களது வார இறுதி நாட்களில் ஒரு துண்டு அசைவமாவது சாப்பிட வேண்டும் என்பதுதான் அசைவப் பிரியர்களின் ஆசை. குறிப்பாக தமிழ்நாட்டில் சைவம் (Benefits of eating non-veg) சாப்பிடுபவர்களை விட அசைவம் சாப்பிடுபவர்கள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. கோழி, ஆட்டின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொருவருக்கு பிடித்தமானதாக இருக்கும்.
குறிப்பாக சிக்கன் லிவர், மட்டன் லிவர் பலருக்கும் பிடிக்கலாம். லிவரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு மிகுந்த நன்மை அளிக்கின்றன. ஆனாலும் பலருக்கும் ஒரு சந்தேகம் உள்ளது. சிக்கன் லிவர் நல்லதா அல்லது மட்டன் லிவர் நல்லதா என்ற கேள்விதான் அது. இரண்டுக்கும் வெவ்வேறு நன்மைகள் உள்ளன.
சிக்கன் லிவரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
சிக்கன் லிவர் அளவில் சிறியதாக இருந்தாலும் அதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. சிக்கன் லிவரில் (Nutrients in Chicken Liver) செலினியம் என்ற தனிமம் உள்ளது, இது உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்க உதவுவதாக நம்பப்படுகிறது. மேலும், கண் பார்வை மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு அவசியமான வைட்டமின்கள் ஏ மற்றும் பி12 இதில் நிறைந்துள்ளன. சிக்கன் ஈரல் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் சரியாக சமைக்கப்பட்ட ஈரல், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மட்டன் லிவரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
மட்டனை பொறுத்தவரை கொழுப்பு நிறைந்த உணவாக இருந்தாலும் மட்டன் லிவரில் சில நன்மைகள் உள்ளன. மட்டன் லிவரில் உள்ள அதிக இரும்புச்சத்து காரணமாக, ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது (Nutrients in Mutton Liver) மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மட்டன் லிவரில் துத்தநாகம், தாமிரம் மற்றும் வைட்டமின் டி போன்ற தாதுக்களும் உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலை அளித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. அதிக ஆற்றல் தேவைப்படும் நபர்கள் ஆட்டு ஈரலை சாப்பிடலாம்.
எது சிறந்தது? எதனை சாப்பிடலாம்?
மட்டன், சிக்கன் என இருவகை லிவர்களிலும் புரதம் மற்றும் இரும்புச்சத்து (Iron content food) போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால், உங்கள் உடலுக்கு ஏற்றதைச் சாப்பிடுவது முக்கியமானது. செரிமானப் பிரச்சனைகள் உள்ளவர்கள் அல்லது இலகுவான உணவை விரும்புபவர்கள் சிக்கன் லிவரை தேர்ந்தெடுக்கலாம். ஆற்றலை அதிகரிக்க அல்லது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க விரும்புபவர்கள் மட்டன் ஈரலை எடுத்துக்கொள்ளலாம்.
எச்சரிக்கை அவசியம்
லிவர் நன்மை அளிக்கிறது என்றாலும் அது சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். லிவர் அதிகமாகச் சாப்பிடுவது நல்லதல்ல. கொலஸ்ட்ரால் பிரச்சினைகள்(Cholesterol), இதய நோய்கள் மற்றும் சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் லிவர் சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். மொத்தத்தில் சிக்கன் லிவர் அல்லது மட்டன் லிவர் ஆகிய இரண்டுமே ஆற்றல் தரும் உணவுகள்தான். இவற்றை வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது தேவைக்கேற்ப குறைந்த அளவிலோ உட்கொள்வது, மருந்துகளின் தேவையின்றி உங்களுக்குப் பல ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
