ட்லெட், பக்கோடா, வடை, பால்ஸ், பிங்கர்ஸ், டிக்கி என்று மாலைநேர ஸ்நாக்ஸ் வகைகள் பல. இந்தப் பட்டியலில் சாண்ட்விச்சுக்குத் தனியிடம் உண்டு. இந்தப் பெயரைக் கேட்கும்போதே சாப்பிடும் ஆவலைத் தூண்டும். நம் இல்லத்தில் மாலை நேரம், மகிழ்ச்சி நேரமாக மாறும். அதற்கு அனைவருக்கும் பிடித்த இந்த சீஸ் சாண்ட்விச் உதவும்.
என்ன தேவை?
- சாண்ட்விச் பிரெட் – 10 ஸ்லைஸ்
- துருவிய சீஸ் – அரை கப்
- பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா அரை கப்
- பொடியாக நறுக்கிய குடமிளகாய் – கால் கப்
- இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
- ரீபைண்டு ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, வெங்காயம், தக்காளியை வதக்கவும். அவை நன்றாக வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதனுடன் குடமிளகாய், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்துவிடவும். பின்னர் துருவிய சீஸ் சேர்த்துக் கிளறி இரண்டு நிமிடங்கள் அப்படியே மூடிவைக்கவும். பிறகு இந்த பில்லிங்கை இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவில் வைத்து டோஸ்ட்டரில் பிரெட்டின் இருபுறமும் சிவக்கும் அளவுக்கு டோஸ்ட் செய்துகொள்ளவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.