வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? ஸ்டாலின் ரியாக்சன்!

Published On:

| By Kavi

சட்டமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் தம்ஸ் அப் காட்டியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்தது.

ADVERTISEMENT

தேர்தல் காரணமாக அரசியல் கட்சித் தலைவர்கள் கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தேர்தல் பணி முடிந்து ஓய்வெடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் புறப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

முதலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கு அப்பாவு உள்ளிட்டோர் முதல்வரை வரவேற்றனர்.

அப்போது அங்கு இருந்த செய்தியாளர்கள், வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் தம்ஸ் அப் காட்டிவிட்டு புறப்பட்டார்.

ADVERTISEMENT

மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கொடைக்கானல் சென்றுள்ளார்.

கொடைக்கானலில் நான்கு நாட்கள் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு ஓய்வெடுக்கும் முதல்வர் பின்னர் சென்னை திரும்பவுள்ளார்.

கடந்த 2 மக்களவைத் தேர்தல்கள், கடந்த சட்டமன்ற தேர்தல் ஆகிய தேர்தல்கள் முடிந்த பின்னர் கொடைக்கானல் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் ஸ்டாலின்.

இந்த மூன்று தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றது.

தற்போது சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் கொடைக்கானலுக்கு சென்று இருக்கிறார். அதுபோன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது குடும்பத்தினருடன் துபாய் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share