கொங்கு பகுதியில் வெளிமாநிலத்தவரால் வாக்குப் பதிவு உயர்வு? கண்ணி வெடியாக 118 தொகுதிகள்.. சென்னையில் விஜய் ஆதரவு அலை? ஃபாதர் ஜெகத் கஸ்பர் அலசல்

Published On:

| By Mathi

Father Jagath

கொங்கு பகுதிகளில் கணிசமான அளவு வாக்குப் பதிவு உயருவதற்கு வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஒரு காரணமாக் இருக்கலாம் என்றும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகள் கடுமையான போட்டி நிலவக் கூடிய ‘கண்ணி வெடி’ தொகுதிகள் என்றும் தமிழ் மையத்தின் நிறுவனர் ஃபாதர் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.

நமது மின்னம்பலம் யூ டியூப் சேனலுக்கு ஃபாதர் ஜெகத் கஸ்பர் அளித்த நேர்காணலில் தெரிவித்த கருத்துகள்:

ADVERTISEMENT
  • திமுக அரசு மீது சில அதிருப்திகள் இருந்தாலும், முதல்வர் மு.க. ஸ்டாலினின் “முதிர்ச்சியான அரசியல் ஆளுமை” ஒரு பெரும் எதிர்ப்பு அலையைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
  • தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகை ஆளும் கட்சிக்குக் கிடைக்க வேண்டிய பெண் வாக்குகளில் ஒரு குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தியுள்ளது.
  • சென்னை & புறநகரில் பல தொகுதிகளில் தவெக இரண்டாவது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக மயிலாப்பூர், தி.நகர், வில்லிவாக்கம் போன்ற இடங்களில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
  • மேற்கு மண்டலம் (கொங்கு) பகுதியில் பதிவான அதிகப்படியான வாக்கு சதவீதம் (குறிப்பாக ஊரகப் பகுதிகளில்) ஒரு புதிராக உள்ளது. இது வெளிமாநில வாக்காளர்களின் வருகையா அல்லது அதிமுக-பாஜக கூட்டணியின் பலமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
  • தெற்கு மண்டலம், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் முக்குலத்தோர் வாக்குகள் சசிகலா, ஓபிஎஸ் மற்றும் பிற காரணிகளால் சிதறியுள்ளன. இது திமுகவிற்கு மறைமுகச் சாதகமாக அமையக்கூடும்.
  • திமுக சுமார் 138 – 156 தொகுதிகளை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிகக் கூடிய சாத்தியம் ஏற்படலாம்
  • திமுகவிற்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல், தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் சூழல்.
  • சுமார் 118 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதால், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முடிவுகள் மாறுபடும் நிலை அதாவது கன்னிவெடி தொகுதிகளாக இருக்கும்.

ஜெகத் கஸ்பரின் பேட்டி முழுமையாக:

Jegath Gaspar Interview | 118 தொகுதிகள்… எங்களுக்கு கிடைத்த ரிப்போர்ட்! | Vijay | MKStalin
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share