விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆளுர் ஷா நவாஸ், எஸ் எஸ் பாலாஜி இருவருக்கும் முக்கிய பொறுப்புகளை திருமாவளவன் வழங்கியுள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆளுர் ஷா நவாஸ், எஸ் எஸ் பாலாஜி இருவரும் வெற்றி பெற்றனர்.
ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் இருவருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் வாய்ப்பு வழங்கவில்லை. இது அரசியல் களத்தில் விவாத பொருளானது.

இந்த நிலையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற வகையில் இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்று திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த சூழலில் இன்று இருவருக்கும் முக்கிய பொறுப்புகளை திருமாவளவன் வழங்கியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளராக எஸ்.எஸ்.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில முதன்மைச் செயலாளராக ஆளூர் ஷாநவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
