மறுவாக்குப்பதிவா? தேர்தல் ஆணையம் விளக்கம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான பொதுத் தேர்தல் 23.04.2026 அன்று 75,064 வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும்  வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளும் , தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் / அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மத்தியப் பார்வையாளர்(கள்) முன்னிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளின்படி அதாவது, காப்பறைக்கு இரண்டடுக்கு ஆயுதமேந்திய பாதுகாப்பு , 24×7 கண்காணிப்பு கேமரா முதலிய ஏற்பாடுகளுடன் வீடியோ பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய காப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வரும் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. 

ADVERTISEMENT

இந்தநிலையில்,  தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கும் நிலையில், அங்கிருந்தும்  மறுவாக்குப்பதிவுக்கான எந்த பரிந்துரையும் வரவில்லை என தேர்தல் ஆணையம் கூறுயுள்ளது. 

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share