வரும் ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஓரளவு மழை பெய்து வருகிறது. திரூவாரூர் ஆவூர் பகுதியில் 140 மிமீ மழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக பாளையம்கோட்டையில், 39.0°செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.
குறைந்தபட்சமாக கொடைக்கானலில்11.7° செல்சியல் வெயில் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கான மழை அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன் 20) வெளியிட்டுள்ளது.
அதில், 21-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
”வெப்பநிலையை பொறுத்தவரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு
இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.
சென்னையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு
பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
