வானிலை அப்டேட் : எந்தெந்த மாவட்டங்களில் மழை?

Published On:

| By Minnambalam

தமிழகத்தில் இன்று எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 8) மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,  தேனி, திண்டுக்கல்,  தென்காசி,  திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடதமிழக மாவட்டங்கள், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் (ஆகஸ்ட் 8) நாளையும் (ஆகஸ்ட் 9) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக, சேலம் மாவட்டம் ஆனைமடுவு அணை பகுதியில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

இன்று மற்றும் நாளை  ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு  45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செல்வம்

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியில் 281 சவரன் கொள்ளை: வயலில் சிதறிகிடந்த நகைகள்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share