சென்னையில் இன்று (செப்டம்பர் 29) ஒரு சவரன் தங்கம் விலை ரூ.200 வரை சரிந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை விலை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் இரண்டு முறை விலை குறைந்து ஒரு சவரன் ரூ.2,680 வரை சரிந்த நிலையில் இன்று ஒரு கிராமுக்கு ரூ.25 வரை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத்தங்கம் ரூ.25 குறைந்து ரூ.13,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ,200 குறைந்து ரூ.1,09,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.25 குறைந்து ரூ.11,410 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.200 குறைந்து ரூ.92,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 5 குறைந்து ரூ.2405க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 வரை குறைந்து ரூ.2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
| 28-9-2026 | 1,09,320 |
| 27-9-2026 | 1,12,000 |
| 26-9-2026 | 1,12,000 |
| 25-9-2026 | 1,12,080 |
| 24-9-2026 | 1,12,000 |
| 23-9-2026 | 1,13,080 |
| 22-9-2026 | 1,13,480 |
| 21-9-2026 | 1,14,160 |
| 20-9-2026 | 1,14,280 |
| 19-9-2026 | 1,14,280 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 28-9-2026 | 245 |
| 27-9-2026 | 250 |
| 26-9-2026 | 250 |
| 25-9-2026 | 250 |
| 24-9-2026 | 250 |
| 23-9-2026 | 255 |
| 22-9-2026 | 255 |
| 21-9-2026 | 260 |
| 20-9-2026 | 260 |
| 19-9-2026 | 260 |
