விஜய் அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தால் பஞ்சாயத்து… இன்று நள்ளிரவு முதல் 7,000 தனியார் பேருந்துகள் ‘ஸ்டிரைக்’!

Published On:

| By Mathi

Private Bus- Strike

தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் இன்று நள்ளிரவு முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.தங்கராஜ், செயலாளர் டி.ஆர்.தர்மராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் சுமார் 7,000 தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக அரசு பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணத் திட்டம் தற்போது மாநகர மற்றும் நகர சாதாரண அரசு பேருந்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் புறநகர் சாதாரண அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதால் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் குறையும்.

ஆகையால் அரசுப் பேருந்துகளைப் போல தனியார் பேருந்துகளிலும் பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க தயாராக உள்ளோம். ஆனால் இதற்கான கட்டணத்தை மானியமாக அரசு வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் கடந்த பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 29-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்” என்றனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share